7. பாடாண்டிணை
616. பாடாண் டிணையே கைக்கிளைப் புறனே*
பாடுதற் குரிய வாடவன் றனாது
பாடமை யொழுக்கம் பாடுமந் நெறித்தே.
இது பாடாண்டிணை கைக்கிளைத்திணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.
(இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுட் பாடாண்டிணை முற்கூறிய
அகத்திணை ஏழனுட் கைக்கிளைத்
திணைக்குப் புறனாம்; அது தான் பாடுதற்கு
உரிய ஆண்மகனது பெருமைபொருந்திய ஒழுக்கத்தைப்
பாடுகின்ற
அம்முறையினையுடைத்து, எ - று.
புறத்திணை பலவற்றுட் ‘பாடாண் டிணையே கைக்கிளைப் புறனே’
என இதனைப் பிரித்தோதினார்,
ஒருதலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட
ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில்வேண்டலின்
அவை தம்மின்வேறாகிய
ஒருதலைக்காமமாகிய கைக்கிளையோ டொத்தலா னென்பது. (18)
பாடாண்டிணையின் றுறைகள்
617. ஒளியு மாற்றலு மோம்பா வீகையு
மளியு மென்றிவை யாய்ந்தினி துரைத்தலுஞ்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானுங்
காவல் கண்ணிய கழலோன் கைதொழு
மூவரி லொருவனை முறையுளி வாழ்த்தலு
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையு
மொருவனை யவனொடு மொழிந்த வானவரொடும்
பொருவினன் புகழ்ந்த மற்றதன் பகுதியு
மண்ணகங் காவன் மன்னவன் முன்ன
ரெண்ணிய பரிசி லிதுவென வுரைத்தலு
மின்னோ ரின்னவை கொடுத்தனர் நீயு
மன்னர்போ லருள்கெனு மியன்மொழி வாழ்த்து
மயலறு சீர்த்தி மான்றேர் மன்ன
* தொல். புறத். 20 : 1 (இ).
இ. வி.-25 |