இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]85

     மான்செய் விழிப்பெண் ணேநீயாண்
        வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
     தேன்கண் டிடவே யென்கின்றா
        ரிதுதான் தோழி யென்னேடி”
                             - திருவருட்பா : இங்கிதமாலை 138.

ஆண்வடிவு - நம்பி. மான்செய்விழி என்பதில் செய் என்பது, உவமவுருபு. “நீ
என்னை நம்பி இருக்கின்றாய்” என்று கேள்விப்பட்டு வந்தேன்” என்று
இறைவர் கூறினார்.

     48. இழையணி மங்கையர் ஈறிலகாமங் குழவிமருங்கிற் கூறிய
பகுதிக்குச் செய்யுள
:-

     “வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
     வரிக்கண்ணி யஞ்சி யலற-வெரிக்கதிர்வேற்
     செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினு
     மெங்கோலந் தீண்ட லினி”                  [பு. வெ. பா. 50]

எனவரும்.

     49. நீங்காக்காதன் மைந்தருமகளிரும் பாங்குறக்கூடும்
பதிநிலையுரைத்தற்குச் செய்யுள
:-

     “ஊடிய வூட லகல வுளநெகிழ்ந்து
     வாடிய மென்றோள் வளையொலிப்பக்-கூடியபின்
     யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉ
     மேமநீர்க் கச்சியெம் மூர்”                   [பு. வெ. பா. 51]

எனவரும்.

இனி ஒன்றென மூடித்தலான் உடனிலைத்துறையும் (புறநா. 58),
துணைவஞ்சித்துறையும் (புறநா. 36, 45, 47, 57, 213) கொள்க. (19)

 

                         3. எச்சம்
 

                  புறப்பொரு ளொழிபு

     618. சாற்றா தொழிந்தவுஞ் சாற்றிய திணைவயி
         னேற்றன பொதுவு மெனவிரு திறனு

         மோதிய புறப்பொரு ளொழிபெனப் படுமே.

இது புறப்பொருளொழிபு இவையென்கின்றது.

(இ - ள்.) மேற்கூறாது ஒழிந்தவும், மேற்கூறிப்போந்த திணைகளினிடத்து
இயைவனவாகிய பொதுவுமென்ற இரு