86 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


கூற்றுத் துறைகளும் முற்கூறிய புறப்பொருளொழிபென்று சொல்லப்படும்; எ -
று.


     அங்ஙனம் இருவகைத்தாதல் மேற்கூறுந் துறைகளானும்
அவற்றிற்குக்காட்டும் வரலாறுகளானும் உய்த்துணர்ந்துகொள்க.
                                                             (20)

                        
துறை யொழிபு
 

619. வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப்
    போந்தை வேம்பே யாரென வரூஉ
    மாபெருந் தானையர் மலைந்த பூவுந்
    துன்னருஞ் சிறப்பிற் றொடுகழன் மன்னனை
    யுன்னஞ் சேர்த்திய வுன்ன நிலையு
    மேழக மூரினு மின்ன னென்றவன்
    றாழ்வி லூக்கத் தேழக நிலையு
    மேந்துபுக ழிறைமக ளிளமை நோக்கான்
    வேந்தியல் பூண்ட மற்றதன் பகுதியுந்
    துளக்கமில் வயவன் றொடுகழல் புனைதலுங்
    களத்திடை வீழ்ந்தோர்க்குக் கற்கண் டிடுதலுங்
    கற்கோ ணிலையுங் கன்னீர்ப் படுத்தலு
    மற்றவை நிரைத்த வத்துறைப் பகுதியுங்
    கன்னாட் டுதலுங் கன்முறை பழிச்சலும்
    பொன்னா ரிற்கொடு புகுதலு மதாஅன்று
    நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
    தனிமகள் புலம்பிய முதுபாலை யானும்
    வாகை வேலவன் வழங்கருஞ் சுரத்திடைத்
    தோகையை யிழந்து துளங்குசுர நடையு
    மனைவியை யிழந்து மனைவயி னிருந்தோன்
    றனிநிலை யுரைத்த தபுதார நிலையு
    மிவர்பூண் மொய்ம்ப னிறந்தபின் மனையோ
    டவமேற் கொண்ட தாபத நிலையு
    மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பயந்த
    தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும்
    பல்லிதழ் மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப்
    புல்லிய பெருங்கிளைப் பூசன் மயக்கமும்