பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 1

ஸ்ரீ :

பன்னிரு பாட்டியல்.

பாயிரம்.


 
சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி
கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே.
 

எழுத்தியல்.

1

ஏத்திய வோத்திய லெழுத்திய லியம்பிற்
பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு
மிருவகை யுண்டியு மூவகைப் பாலும்
பொருவி றானமுங் கன்னலும் புள்ளு
நயம்பெறு நாளு மியம்புதல் கடனே.

 

 (1)

1. - பிறப்பு.

2

சிறப்புடை யெழுத்தின் பிறப்பினி துரைப்பின்
முந்நான் குயிரு முதல்வன் படைத்தனன்.
 

(1)

3

 நல்லுயிர்ப் பகுதி நான்முகன் படைத்தனன். பொய்கையார்.
 

(2)

4

கண்ணுத றிருமால் கதிர்வேன் முருகன்
விண்ணவர் தலைவன் வெங்கதிர் வெண்மதி
1நிதிக்கோன் கூற்றுவ னெடுநீர் வருண
னென்னுங் கடவுள ரிரண்டிரண் டாக
மன்னிய வொற்று 2வகைவேறு படைத்தனர்.
 

(3)

5

ஒன்பது தேவரு முடம்பு படைத்தனர். பொய்கையார்.

 

(4)
 

2-வருணம்.

6

நறுமலர்த் திசைமுக னீச னாரண
னறுமுகன் படைத்தன வந்தணர் சாதி.
 

(1)


 
        அவை:- அகர முதற் பன்னீருயிரும்,
                          க, ங, ச, ஞ, ட, ணவும்.

[பிரதிபேதம்.] 1நிதிக்கோ னியமன். 2வகைபடைத்தனரே.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்