சுவாமிநாதம் 1. | பூமகளும் பாமகளும் போற்றுமே நாமகளுங் கோமகளுங் கொண்டார்கைக் குஞ்சரமே - மாமகிமைத் தொன்னூற்குள் உண்டாய்த் தொகுத்த இலக்கணமாம் இந்நூற்குக் காப்பாகு மே. | கடவுள் வாழ்த்து உரை : நிலமகளும் கவிதாசக்தியாம் பாமகளும் போற்றுகின்ற சரசுவதியும் இலக்குமியும் உள்ளத்தில் கொண்டு நிறைதற்குக் காரணமான விநாயகப் பெருமானே தொன்னூல் பலவற்றிலிருந்து தொகுத்த இலக்கணமான சுவாமிநாதம் என்ற இந்நூலுக்குக் காப்பாம். விளக்கம் : பாமகள் - கவிதாசக்தி. போற்றுமெய் என்று பாடங்கிடைப்பின் நலம். கொண்டு ஆர்கைக் குஞ்சரம் என்க. குஞ்சரமே காப்பு என்பதாம். குறிப்பு : பி. பொ. சுவடியில் முதலாவது எழுத்தாக்க மரபு என்ற தலைப்பும் இறுதியில் ‘‘நூல்வழி முற்றும்’’ என்ற தலைப்பும் உள்ளன. அடுத்த பகுதிக்கும் எழுத்தாக்க |