பெயர், வினை, இடை, உரி நான்கு அடியானும் பிறக்கும் வினை’ (இ.
கொ. 68-1, 2)
‘முதனிலை, தொழிற்பெயர், முற்று, ஈரெச்சம் என்று ஐவகையுள்ளே
அடங்கும் வினையே’ (- 69)
‘தனிவினை, தொடர்வினையென இருவினையினும்’ (- 65) எஞ்சிய
பகுதிகள் 66-ஆம் சூத்திரத்தைத் தழுவிச் சுருக்கமாக
எழுதப்பட்டுள்ளன.
பாட விளக்கம் : 2-வது வரி - ‘முதலிலை என்ற மூல பாடம்
‘முதனிலை’ என்று திருத்திக் கொள்ளப்பட்டது. இலக்கணக்கொத்து 65-ஆம்
சூத்திரக்கருத்தும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.
48. |
தொடர்வினைதான் விகுதிமுதற் பொருந்தல்அன்றித் திரிதல்,
சொற்றிணைபால் இடம்பொழுது விளக்குதல்;செய் வினையே படுவினைதன்
வினைபிறவின் வினைவிதியே மறையே பரித்தமுதல்
சினையிவற்றிற் பொதுக்கடெரி நிலையே இடுதெரியா நிலையெச்சப்
பொதுஒருமை பன்மை இயல்புதிரி யினும்பலவாய்க்
கருத்தின்நிலங் கால மொடுகருவி தொழில்செய்பொருள் இன்னதற்கு
இப்பயன் என்றுளபொருத் தம்பொருந்தியே பொருண்முடிவு
தருமே. | |
[2] | |
தொடர்வினையின் இலக்கணம் கூறுகின்றது.
உரை : தொடர்வினை என்பது விகுதி, இடைநிலை போன்றவை
பொருந்தி வரும். பகுதி, விகுதி போன்றவை சேராமல் திரிதல்; திணை, பால்,
இடம், பொழுது விளக்குதல்; செய்வினை, செயப்பாட்டுவினை, தன்வினை,
பிறவினை, உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை, முதல்வினை, சினைவினை,
முதல்-சினைவினை ஆகியவற்றில் சிலவற்றிற்குப் பொதுவாகவும் அமைந்து
தெரிநிலைவினை, தெரியாநிலைவினை, பெயரெச்சம், வினையெச்சம்,
இரண்டுக்கும், பொதுவான எச்சம், ஒருமைப் பன்மையை இயல்பாகவும்
திரிபாகவும் உணர்த்துதல்; நிலம், |