சுவாமிநாதம்128சொல்லதிகாரம்
 

சின்    : வென்றிசின் யானும். (நற் 61. 10)

பிற    : ஆயனை அல்ல பிற.

பிறக்கு : நசை பிறக்கு ஒழிய. (புறம் 140. 4)

அரோ : இருங்குயில் ஆலுமரோ (கலி. 33. 24)

போ   : பிரியின் வாழாது என்போ.

கோள் :

இருந்து  : எழுந்திருந்தேன். (எழுந்து+இருந்து+ஏன்)

இட்டு   : நெஞ்சம் பிளந்திட்டு.

அன்று  : தேவன் அவன் சேவடி சேர்ந்து மன்றே. (சீவக. 1.4)

ஆம்   : பணியுமாம் என்றும் பெருமை. (குறள் 978)

தம்    : தாவில் சீர்தம் மடிக்கண்.

தான்   : நீதான்.

என    : இறுவுழி இறுகவென.

என்ப   : இழிந்தது என்பவே. (சீவக. 39. 4)

குரை   : பலகுரைத்துன்பங்கள். (குறள். 1045)

ஓர்    : அஞ்சுவதோரும் மறனே. (குறள் 366)

போல்  : மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும்.

யா    : யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனாருக்கு.

கா    : காண்டிகா. (கலி. 99. 9).

மாது  : விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே. (நற். 178. 10)

இகும் : காண்டிகும் அல்லமோ. (ஐங்குறு 121. 1)

சின் : தண்ணென்றிசினே. (ஐங்குறு 73. 4) சின் என்பது இரண்டு 
      இடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

     இந்தச் சூத்திரமும் இலக்கண விளக்கம் 274, 272, 273, 276, 277
ஆகிய சூத்திரங்களையொட்டியே அமைக்கப்பட்டுள்ளது.