சுவாமிநாதம்138சொல்லதிகாரம்
 

4. ஏவல் வினா    : சாத்தா உண்டாயோ - (போய்) உண் என்று
                 பொருள்படுவதால் ஏவல்ஆகும்.

வினா வடிவங்கள் :

யா   : யாவன், யாவள் முதலிய சொற்களில் பகுதி.
ஆர்  : அங்கு வந்தது ஆர்.
யார்  : அங்கு வந்தது யார்.
யாது  : இம்மரங்களில் கருங்காலி யாது
ஓ    : சாத்தா உண்டாயோ
ஏ    : நீயே கொண்டாய்
எவன் : ஏதிலார் சொன்னது எவன் (சிலம்பு 18:15)
கொல் : உண்டான் கொல்

     விடையின் வகை:

1. செவ்வன் இறை : உயிர் எத்தன்மைத்து என்ற கேள்விக்கு உணர்தல்
                 தன்மைத்து என்பது - நேரடியாகப் பதில் சொல்வது.

2. இறை பயப்பது : உண்டாயா என்ற கேள்விக்கு வயிறு வலிக்கிறது என்பது
                 - மறைமுகமாகப் பதில் சொல்வது.

இறை பயப்பின் வகை:

     உண்டாயா என்ற கேள்விக்கு,

1. உற்றல் கூறல் : வயிறு வலித்தது (அதனால் உண்ணவில்லை)

2. உறுவது கூறல் : வயிறு வலிக்கும்       ’’

3. ஏவல் : நீ உண்

4. மறுத்திடல் : உண்ண மாட்டேன்