பயன்படுத்திக் கூறுவர். அந்த ‘ஆகு’ என்ற சொல்லிற்கு முன் காரணச் சொல்லைக் கூறுதல் செய்யுளில் உண்டு. காரணச் சொல் இல்லாமலும் ‘ஆகு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கிடத்து உண்டு. விளக்கம் : மரபு: மரவேலை செய்பவரைத் ‘தச்சர்’ என்றும் வீடு கட்டுபவரைக் ‘கொத்தனார்,’ என்றும் கூறுவது மரபு என்பர். இவ்வாறு ஒரு பொருளைக்குறிக்க வழக்கில் வழங்கிவரும் சொல்லைப் பயன்படுத்துவது என்பதே மரபு அடிப்படையில் எழுந்தது என்று கூறலாம். செந்தாமரை என்ற அடை எடுத்த மொழி தாமரையில் ஒரு வகையைக் குறிப்பதால் அது இனம் உள்ளது. இதை Restrictive Clause என்பர் மொழியியலார். செஞ்ஞாயிறு என்ற அடையடுத்த மொழி ‘ஞாயிற்’றில் ஒருவகையைக் குறிப்பிடாததால் அடை இனத்தைச் சுட்டவில்லை. இதை Non-Restrictive Clause என்பர். இனம் உள்ளன இனம் இல்லாதன பொருள் : நெய்க்குடம் உப்புஅளம் இடம் : குளநெல் ஊர் மன்று காலம் : கார்த்திகை விளக்கு நாள் அரும்பு சினை : பூமரம் இலைமரம் குணம் : செந்தாமரை செம்போத்து தொழில் : ஆடு பாம்பு தோய்தயிர் இயற்கைப் பொருள் : நிலம் வலிது செயற்கைப்பொருள் : நிலம் மெலிதாயிற்று செய்யுள் வழக்கு : நீர் கலந்தமையால் நிலம் மெலிதாயிற்று. |