விளக்கம் : இது அகப்பொருள் 37 முதல் 42 வரை உள்ள சூத்திரங்களையும் 47ஆம் சூத்திரத்தையும் தழுவியது. 83. | அறத்தொடுநி லைதலைவி சகிசெவிலி நற்றாய் ஆகு(ம்);நால்வ ரும்ஒருவர்க் கொருவர்வினா விடையாம்; இறப்பில்குர வரிற்புணர்வு வாயிலினாற்புணர்வு என்று இரண்டுகற்பிற் புணர்ச்சி;மறைப் புணர்வுமன்றற், புணர்வாங்; குறித்தபரத் தையர்,காமக் கிழத்தியர்,பின் வதுவைக் குலக்கிழத்தி யெனமூவ ரவைக்குரியர்; வருணம் அறுத்தபரத் தையர்கள விற்குரியர்; ஒழிந்தோர்கள் மன்றல்செய்து கொளற்குரியர் என்றுஅறிகற் பினுக்கே. [13] | அறத்தொடு நிற்றல், கற்பில் புணர்ச்சி முதலியவற்றை விளக்குகின்றது. உரை : தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் ஒருவர்க்கு ஒருவர் வினவியும் விடை கூறியும் கொள்வர். கற்பிற்புணர்ச்சி என்பது குரவராற் புணரும் புணர்ச்சி, வாயில்களாற் புணரும் புணர்ச்சி என இருவகைப்படும் களவுப் புணர்ச்சி மணத்தில் முடியும். பரத்தையர், காமக்கிழத்தியர், வதுவைக்குலக்கிழத்தியர் என மூவகையோரும் புணர்ச்சி ஒழுக்கத்திற்கு உரியர். நல்ல சாதி இல்லாத பரத்தையர் களவிற்குரியர். ஒழிந்தோர் வதுவைப்புணர்ச்சிக்குரியர். விளக்கம் : இது அகப்பொருள் 48, 53, 56, 58, 59, 60, 61 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. 84. | கற்பியலிற் பரத்தை,கல்வி, காப்பு,(உ)தவி, தூது, கைபொருளிற் பிரிவுஆறு (உ)ண்டு;அதிற்காவல் பரத்தை இற்பிரிவும் பருவம்இலைத்; தூது(உ)தவி பொருளிடைப் பிரிவுஓ ராண்டு;கல்வி பிரிவுமூன்று ஆண்டாஞ்; | |