சுவாமிநாதம்176பொருளதிகாரம்
 
பறிதல் ஆகிய நான்குவகைப்படும். நல்வினை வயத்தால் ஒத்த தலைமகனும்
தலைமகளும் ஒருவரையொருவர் சந்தித்தல் காட்சி; தலைமகளின் வடிவமும்
அவளைக்கண்ட இடமும் சிறப்புடையது ஆனகாலத்து தலைமகன்பால்
நிகழ்வது ஐயம்; தெய்வத்துக்கும் மக்களுக்கும் உள்ள வேற்றுமையான கண்
இமைத்தல் போன்றவற்றால் தலைவன் தெளிதல் துணிவு. தலைமகளின் கண்
வழியால் அவள் உடம்பாட்டை அறிதல் குறிப்பறிதல்.

விளக்கம் :

     இது அகப்பொருள் 117, தொல்காப்பியக் களவியல் 14, அகப்பொருள்
118 முதல் 122 வரையுள்ள சூத்திரங்கள் ஆகியவற்றைத் தழுவியது.

     பா. வி. ‘கிழவோணு மின்னுங்’ (3 வது வரி) என்ற பாடம்
திருத்தமுறவேண்டும். ‘எய்தூ தையம்’ (4வது வரி) என்பது எய்துவது ஐயம்
என்றிருக்கவேண்டும்.

86. வேண்டுஇயற்கைப் புணர்ச்சிகள்,வன் புறை,தெளிவு, பிரிவின்
     வியத்தல்,பிரி கலங்கல்,இடந் தலைப்பாடு,அன் பரிற்கூட்டு
ஈண்டுமதி யுடன்பாடு, பாங்கியினாற் கூட்டம்,
     எற்குறி,எல் லிடையீடு, இராக்குறிஅல், லிடையீடு,
ஆண்டுவரை வினில்வேட்கை, வரைவுகடா வுதலே,
     அரசன்ஒரு வழித்தணத்தல், வரைவிடையே வைத்துத்
தூண்டுபொருள் வயிற்பிரிதல், என்றபதி னேழு
     தொகையினால்வகை விரியாய்வருங் களவுஎன் பதுவே  [2]

களவிற்குரிய கிளவித் தொகை உணர்த்துகின்றது.

     உரை : 1. இயற்கைப்புணர்ச்சி, 2. வன்புறை, 3. தெளிவு, 4. பிரிவின்
வியத்தல், 5. பிரிவுழிக் கலங்கல், 6. இடந்தலைப்பாடு 7. அன்பர் கூட்டு
(பாங்கற் கூட்டம்), 8. மதி உடன்பாடு (பாங்கி மதி உடன்பாடு), 9.
பாங்கியினாற் கூட்டம், 10. பகற்குறி, 11. பகற்குறி இடையீடு, 12. இரவுக்குறி,
13. இரவுக்குறி இடையீடு, 14. வரைதல் வேட்கை,