சுவாமிநாதம்178பொருளதிகாரம்
 
வகைப்படும். தலைமகளாற்புணரும் இப்புணர்ச்சி, 1. இரந்து வேண்ட
எண்ணல், 2. இரந்து இடன் நிற்றல், 3. முன்னிலை யாக்குதல், 4.
மெய்தீண்டல், 5. பொய் பாராட்டல், 6. இடம் பெற்று அணைதல், 7.
வழிபாடு மறுத்தல், 8. இடையூறு சொல்லல், 9. நீடு நினைந்து இரங்குதல்,
10. மறுத்து எதிர் கொளல், 11. வீண்நகை, 12. நகை வாய்ப்பு உணர்தல், 13.
முயங்குதல், 14. புணருதல், 15. புகழ்தல் என்ற சிறு பிரிவு பதினைந்து
உடையது.

     விளக்கம் : இது நம்பியகப்பொருள் 125, 126, 127 ஆகிய
சூத்திரங்களை ஒட்டியது.

88. புணரும்ஐயந் தீர்த்தல்,பிரிவு அறிவுறுத்தல், இரண்டாய்ப்;
     புனைந்துழிநா ணியது(உ)ணர்ந்து தெளித்தல்,பெரு
நயப்பே, அணவுதெய்வத் திறம்பேசல், பிரியம்என்றல், பிரிவே
     அறைதல்,இடம் அணித்துஎன்றல், வன்புறைஆ றாகு(ம்);
மணமகல்இ றைவிதே றுதல்ஒன்றே தெளிவா(ம்);
     மாதுசெல்லுஞ் செலவுகண்டு நெஞ்சொடுகோன் சொல்லும்
உணர்வுபெறு பாக னொடு சொல்லலும்,என் றுஇரண்டாய்
     ஓதுவர்,கோன் றலைவிபிரிந் துழிமகிழ்ச்சி மரபே.     [4]

இது வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி ஆகிய மூன்றையும்
விளக்குகின்றது.

     உரை: வன்புறை என்பது 1. ஐயந் தீர்த்தல், 2. பிரிவு அறிவுறுத்தல்
என இரண்டு பெரும் பிரிவை உடையது. 1. புனைந்துழி நாணியது உணர்ந்து
தெளிவித்தல், 2. பெரு நயப்பு உரைத்தல், 3. தெய்வத்திறம் பேசுதல், 4.
பிரியேன் என்றல், 5. பிரிவைக்கூறுதல், 6. இடம் அண்மையில் உள்ளது
என்று கூறுதல் என்ற ஆறு சிறு பிரிவை உடையது. இவை தலைமகன்
தலைமகளது அறிவின்மை நீங்கச் சொன்ன வன்புறைச் சொற்களாம்.

     தலைமகன் கூறிய சொல்லைத் தலைமகள் தெளிதல் என்ற ஒன்றே
தெளிவு எனப்படும். 1. தலைவி தலைவனைப் பிரிந்து