சுவாமிநாதம்191பொருளதிகாரம்
 
தோழி கூறுதல், 9. தலைவி மேல் தலைவன் குற்றம் சாட்டுதல், 10. தலைவி
குறி மருண்டமையைத் தோழி தலைவனுக்குச் சொல்லுதல், 11. தலைவன்
கூறிய கடுஞ்சொல்லைத் தலைமகளுக்குத் தோழி உணர்த்துதல், 12. தலைவி
தன்னுடைய தவறு இல்லை என்று கூறுதல்.

     விளக்கம் : இது அகப்பொருள் 159, 160, ஆகிய இரு சூத்திரத்தையும்
தழுவியது.

     பாட விளக்கம் : தனித்தல் (3வது வரி) என்னும் மூலபாடம் தணித்தல்
என்று கொள்ளப்பட்டுள்ளது.

102. அன்புறுதாய் நாய்ஊர்துஞ் சாமைகா வலரால்
     அச்ச(ம்)நிலா வெளிப்படல்கூ கைகுழறல், கோழி
தன்குரற்காட் டுதல்பத்துஒன் பான்துறையாம், அச்சந்
     தகும்உவர்ப்புஆற் றாமைமூன் றாய்ச் சகிநா யகிபால்
துன்பம்வினா வுதல்,செவிலி மறைஅறிந்து அவட்குச்
     சொல்இறையோன் வரற்குஅருமை சொல்,இறைஊர்ப்
                                           படாதும்
என்றல்,சகி அவற்பழித்தல், இறைவிஇறை வனைநொந்து
     இயற்படுத்தல், கனவுஅழிவு, கவின்அழிவு, சொல்லே, [18]

இது இரவுக்குறி இடையீடும் வரைதல் வேட்கையும் கூறுகின்றது.

     உரை: 13. தாய் தூங்காதிருத்தல், 14. நாய் தூங்காதிருத்தல், 15. ஊர்
தூங்காதிருத்தல், 16. காவலர் வருகின்ற அச்சம், 17. நிலா வெளிப்படுதல்,
18. கூகை கூவுதல், 19. கோழி கூவுதல் எனப் பத்தொன்பதும் இரவுக்குறி
இடையீட்டிற்கு உரியன. 1. அச்சம், 2. வெறுப்பு, 3. ஆற்றாமை என மூன்று
பெரும் பிரிவினை உடையது வரைதல் வேட்கை.

     1. தோழி தலைவனிடம் துன்பம் வினாவுதல், 2. இரகசியத்தைத்
தோழி தலைவிக்குச் சொல்லுதல் 3. தலைமகன் வருதற்குரிய துன்பத்தைச்
சொல்லுதல், 4. தலைமகன் ஊர் செல்வான் என்றல், 5. தோழி தலைவனைப்
பழித்தல்,