சுவாமிநாதம்20எழுத்ததிகாரம்

அண்பல்லையும் அண்ணத்தையும் முறையே நாவிளிம்பைத் தொடவும்
தடவவும் முறையே லகர ளகரமும் கீழ் உதடும் மேற்பல்லும் பொருந்திட
வகரமும் நுனிநா அண்ணத்தின் நுனியின் மேலே தொட றகர னகரமும்
பிறக்கும். ஒவ்வொன்றிற்கும் சிறு வேறுபாடு உண்டு.

விளக்கம் : யகரத்தின் பிறப்பு நன்னூலைத் தழுவிக் கூறப்பட்டுள்ளது.
நன்னூலாரின் கருத்துப்படி யகரம் முதல் நாமுதல் அண்ணஒலி (Velar
Sound)
ஆகிறது, இது தவறு என்பது இலக்கண விளக்க உரையில் (12-ஆம்
சூத். உரை) எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

நன்னூலைப் பெரிதும் தழுவி எழுதப்பட்டுள்ளது.

பா. வி.: ‘தனவாம்’ என்று இருந்தது தநவாம் (1-வது வரி) என்று
கொள்ளப்பட்டுள்ளது.

18. வன்மை மென்மை யிடைமை யுயிர் ஆய்தம் என்றுஐந்
    தொடர்க்கீழ் வல்லெழுத்தூருக்குறுகுங்; குறள் உவின்
 

கீழ்யவரிற்

 
  சொன்மியா வினில் இகரங்குறுகு[ம்]; முதலிடைபின்
    சொற்பொருள் ஐயே குறுகு[ம்] முன் ஒளவே குறுகும்
இன்னலள வலித்திரிபின் இடத்து ஆய்தங்குறுகும்; லளத்
    திரிந்த னணப் பின் வம்மென் மக்குறுகும்; இவையாறு;
உன்னுமலாற் குறிலின்கீழ் உயிர்வலிமேல் அங்காந்துரத்
    தொலியால் ஒற்றியல் போல் உதித்திடும் ஆய்தமுமே. (6)

சார்பு எழுத்துக்களின் பிறப்புக் கூறத்தொடங்கி அறுவகை குறுக்கமும்
ஆய்தமும் பற்றிப் பேசுகின்றது இச்சூத்திரம்.

உரை : வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர், ஆய்தம் ஆகிய
ஐந்து எழுத்துக்களை இறுதியில் உடைய தொடரின் கீழ்வரும் வல்லினம்
ஊர்ந்த உகரம் குறுகிக் குற்றியலுகரமாகும். மியா என்ற சொல்லில் வரும்
இகரமும் யகரமுதன்மொழி வரும்போது இகரமாக மாறும் குற்றியலுகரமும்
குற்றியலிகரமாகும். மொழிக்கு முன்னும் பின்னும்