சுவாமிநாதம்201பொருளதிகாரம்
 

நிற்றற்கு உரிய கிளவியாகும். ஆக அறத்தொடு நிற்றலுக்குரிய கிளவி
பதினேழு (தலைவி-9, தோழி-6, செவிலி-2) ஆகும். வரைவு மலிதலுக்குக்
கூறிய ஏழுகிளவியும் அறத்தொடு நிற்றலுக்குக் கூறிய பதினேழு கிளவியும்
ஆக இருபத்து நான்கு கிளவியும் களவு வெளிப்படுமுன் வரை விற்குரியன.
1. தலைவருடன் சென்று மணஞ்செய்து கொள்ளுதல், 2. சென்றுவந்தபின்
மணஞ்செய்துகொள்ளல், 3. தலைவனுடன் செல்ல இடையூறு ஏற்பட்டபின்
வரைதல் என மூன்று வகையும் களவு வெளிப்பட்டபின் ஏற்படும் வரைவாகும்.
இதனுடைய இனமாக 1. தலைவனுடன் தலைவி செல்லும் உடன்போக்கை
ஒத்திப்போடுதல், 2. தலைவி தலைவனுடைய உடைமையாய்க் கற்போடு கூடி
இருத்தலைப் பலரும் அறிதல், 3. புதல்வியைத் தேடிச்சென்று செவிலி மீண்டு
வருதலும், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வருதலுமான மீட்சி
ஆகிய மூன்றும் உடன்போய் வரைவின் பாகுபாடாகும்.

     விளக்கம் : இது 178, 179, 180 ஆகிய மூன்று அகப்பொருள் பாடலின்
தழுவலாகும்.

     பாட விளக்கம் : ‘அறமுணர்த்தாய்’ (முதல் வரி) என்ற மூலபாடம்
அறம் உணர்தாய் என்றும் ‘வேற்றுமை வீணாதல் (முதல் வரி) என்பது
வேற்றுமை வினாதல் என்றும் திருத்தப்பட்டுள்ளன. ‘மூன்றதனின்மிறை’ (3ம்
வரி) என்ற மூலபாடம், மூன்று அதன் இனம் இறை’ என்று
திருத்தப்பட்டுள்ளது.