சுவாமிநாதம்204பொருளதிகாரம்
 

உடன் போக்கிற்கு உரிய கிளவிகளாகும். 1. செவிலி புலம்புதல், 2.
தலைமகளைப் பெற்ற தாய் (நற்றாய்) புலம்புதல், 3. மனையின்கண் இருந்து
நற்றாய் வருந்துதல், 4. இவர்கள் வருந்துதலைக் கண்டவர்கள் இரங்கிக்
கூறுதல், 5. செவிலி தலைவியைத் தேடிக்கொண்டு செல்லுதல் என ஐந்து
வகைப்படும் கற்பொடு புணர்ந்த கவ்வை.

     1. செவிலி தோழியைக் கேட்டல், 2. தோழி, தலைவி தலைவனுடன்
உடன்போக்கு போனமையைக் கூறுதல், 3. தன்னைத் தேற்றுவார்க்குப் பதில்
கூறிக்கொண்டு வருந்துதல், 4. எதிர்வருகின்ற செவிலியினுடைய அறியாமை
எடுத்துச் சொல்லுதல், 5. செவிலி தெய்வத்தை வணங்குதல் என்று செவிலி
புலம்பல் மட்டும் ஐவகையாக வரும்.

     விளக்கம். இது அகப்பொருள் 182: 11 முதல் உள்ள பகுதியையும், 183,
184, ஆகிய சூத்திரங்களையும் தழுவியது. அகப்பொருளில் உடன்போக்கு
பதினெட்டுக்கிளவிகளேபெறும் என்று கூறியிருக்க இவர் பத்தொன்பது என்று
குறிப்பிடுகிறார்.

     பாட விளக்கம். ‘(பதி) அணுமை (சொல்)’ என்ற மூல பாடம்,
அணிமை என்று திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

     அனை மருட்சி என்பது மூலபாடம். அகப்பொருளோடு ஒப்பிட்டுப்
பார்க்கும்போது (செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல் கவர்மனை மருட்சி-183,
1, 2) மனை மருட்சி என்று திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது என்பது
தெளிவாகும். ஆனால் நம்பியகப்பொருள் 186ஆம் பாட்டில் ‘ஐந்து மனை
மருட்சிக்குரிய’ என்ற பகுதியின் பழைய உரையில் ‘ஐந்தும் அனை
மருட்சிக்குரிய’ என்ற பொருள் கொள்ளப்பட்டிருப்பதை அகப்பொருள்
பதிப்பாசிரியர் கா.ரா. கோவிந்தராச முதலியார் அவர்கள் சுட்டிக்
காட்டியுள்ளார்கள் (அகப்பொருள் பக். 226 அடிக்குறிப்பு).