தனிமகிழ்ச்சி வினவல்செப் பல்,நால்வகைத்தாய்ச்; செவிலி தலைவிசேண் அகன்றமைதாய்க்கு உணர்த்தல், நம்மூர்ச் சார்ந்தோம் எனஇறைவிக்கு இறைசொலல்,தம் வரவுமுன் செல்வோரோடு இகுளையர்க்கே சொலிவிடுத்தல், அவள் அவர்க்கு ஓதுதலே. [30] | இது கற்பொடு புணர்ந்த கவ்வையின் எஞ்சிய பகுதியும் மீட்சியும் விளக்குகின்றது. உரை: 16. குராமரத்தோடு புலம்புதல், 17. சென்றவர்களின் அடிச்சுவட்டினைக் கண்டு வருந்துதல், 18. தன்னுடன் வருவோரை வினாவுதல், 19. அவர்கள் செவிலியைத் தேற்றுதல், 20. அன்னை (செவிலி) மகளைக் காணாது வருத்தம் அடைதல். ஆக இருபத்தெட்டுக் கிளவியும் கற்பொடு புணர்ந்த கவ்வைக்குரியன. 1. உண்மையைத் தெளிதல், 2. மகிழ்ச்சி அடைதல், 3. வினவுதல், 4. சொல்லுதல் என நான்கு வகையாய் வரும் மீட்சி. 1. தலைவி நீண்டதூரம் சென்று விட்டமையைச் செவிலி தோழிக்கு உணர்த்தல், 2. நம் ஊருக்கு அருகே வந்துவிட்டோம் என்று தலைவிக்குத் தலைவன் கூறுதல், 3. தங்களுடைய வருகையை முன்னே செல்வோர் வழியாகத் தோழிக்குச் சொல்லி அனுப்புதல், 4. முன்னே செல்வோர் போய்த் தோழிக்குச் சொல்லுதல். விளக்கம் : அகப்பொருள் 188.4 முதல் 191.5 வரையுள்ள பகுதியைப் பின்பற்றி எழுந்தது கற்போடு புணர்ந்த கவ்வை இருபத்தெட்டு என்று கூறியுள்ளர். ஆனால் இங்கு பெரும்பிரிவு ஐந்தும் செவிலிபுலம்பல் என்ற சிறுபிரிவு ஐந்தும். ஏனைய சிறுபிரிவுகள் இருபதும்தான் காணப்படுகின்றன. எனவே இருபத்தெட்டுக் கிளவி என்று கூறியதன் பொருத்தம் விளங்கவில்லை. நம்பியகப்பொருள் கற்பொடு புணர்ந்த கவ்வைக்கு இருபத்தொருகிளவியே (180) என்று கூறியுள்ளது. |