12. பகைவர்தஞ்சேனையை நெருங்கித் தன்னுடைய ஆண்மைத் தன்மை உயர்த்திச் சொல்லும் நெடுமொழி, 13. தன்னுடைய குடியின் சிறப்பினைச் சொல்லும் முதுமொழி வஞ்சி, 14. பகைவர் ஊர்களை எரித்த புல வஞ்சி (உழபுல வஞ்சி). 15. பகைவர் ஊர்களைக் கொள்ளையடித்த வஞ்சி (மழபுல வஞ்சி). 16. பாணர்க்குப் பரிசில் கொடுத்தல் கொடை வஞ்சி), 17. வென்ற அரசனுக்குத் திறையைக் கொடுத்துக் குடிமக்களைப் பாதுகாத்த குறுவஞ்சி, 18. வீரர்களுக்குக் கட்டப்பட்ட பாசறையின் கூறுபாட்டைக் கூறுதல், 19. ஒரு வீரனின் தனிச்சிறப்பு நிலையைக் கூறுதல் (தனிநிலை), 20. வீரன் தோற்று ஓடுபவரின் முதுகுப் புறத்து வாள் எறியாத தன்மையைக் கூறுதல் (தழிஞ்சி), 21. பகைவர்கள் பணிந்த பின்னும் படையெடுத்து வந்த மன்னவன் தன் நாட்டுக்குச் செல்லாமல் பாசறையில் தங்கியிருத்தல் (பாசறை வஞ்சி), 22. பகைவர்களின் நாட்டை எரித்த பெருவஞ்சி, 23. சோறு உதவல் (பெருஞ்சோற்று வஞ்சி), 24. அரசனுடைய வெற்றிப் புகழ் கூறும் இசை வஞ்சி, 25. பகையரசனின் நாடு அழிவதற்கு இரங்குதல் என இருபத்தைந்து துறைகளை உடையது. விளக்கம் : புறப்பொருள் வெண்பாமாலை 21 துறைகளைச் (சூத்திரம் 3) கூறுகின்றது. இவர் மாற்றியும் கூட்டியும் 25 ஆக ஆக்கியுள்ளார். ‘திறை வாங்கி இறை பெயர் பக்கம்’ என்பதைப்புறப் பொருள் வெண்பாமாலை கொற்றவை நிலையில் சேர்த்துக்கூற இவர் தனித்துறையாக்கி விட்டார். அவ்வாறே கட்டூர் வகை உரைத்தல் என்பதும் குறுவஞ்சியிலிருந்து வேறானதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வெட்சிக்குப் பிறகு வஞ்சியும் உழிஞையும் கூறுமுறையும் தொல்காப்பியத்தைத் தழுவியது. புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சி, காஞ்சி, என்ற வரிசையில் விளக்குகின்றது. |