சொல்லும் கந்தழி, 9. உழிஞை மாலையணிந்த புகழுடைய சிவபெருமானின் புகழ்கூறும் முற்றுழிஞை, 10. எல்லோரும் காந்தள் பூ விரும்புதலைச் சொல்லுதல், 11. மதிற்புறத்து இருத்தல், 12. மதிலைக் கைப்பற்றியதைச் சொல்லுதல். விளக்கம் : உழிஞைக்குரிய பொதுவிளக்கம் தொல்காப்பியத்தை (புறம். 61) ஒட்டியது. பாட விளக்கம் : அதிகுழிஞை என்பது அதிருழிஞை (அதிர்+உழிஞை) என்று இருந்திருக்கலாம். 135. | கோன்றிறத்தோன் மலிபுரைத்தன், மதில்ஒருவன் பொருத குற்றுழிஞை, மிளைகடப்ப விரைதல்,மிளை காத்தல், ஏன்றுஅகழிப் புறத்திருத்தல், பொரும்பாசி, மதிலில் ஏணிசார்த்து தல்,ஏணி இவரும்எயிற் பாசி, ஆன்றமதில் பாய்தல்,அகத் தரையடல் போரவா ஓராமதிற்சீர் சொல்லகாலை மதில்உளமுர சியம்பத் தோன்றல்சூழ் சொல்ல,வேற்றுப் படைவரவு,ஆ னைக்கோள், சூழ்எயிலின் வரகுவிதைத் திடல்,வாள் மங்கலமே. [7] | உரை: 13. அரசன் சிறந்த வீரர்களின் கொள்கையைப் புகழ்ந்து உரைத்தல், 14. பகைவர் மதில்மேல் வீரன் ஒருவன் மட்டுமே போரிட்ட குற்றுழிஞை, 15. காவற்காட்டைக்கடந்து முன்னே செல்லுதல், 16. காவற்காட்டைப் பகைவர்கள் காத்தல், 17. அகழியின் புறத்துத் தங்குதல், 18. அகழியிடத்துப் போரிடுதல், 19. மதிலில் ஏணியைச் சார்த்துதல், 20. அரணத்தின் வலி அழியும்படி ஏணிமேல் ஏறிச்செல்லு தல், 21. மதில்மேல் பாய்ந்து செல்லுதல் (முது உழிஞை என்று புறப்பொருள் கூறும்), 22. மதிலினுள் சென்றுபோரிடுதல், 23. மதிலினுடைய பெருமையைச் சொல்லவும் காலை நேரத்தில் முரசுஒலிப்பவும் படையெடுத்த வீரர்கள்கோபித்தல், 24. வேற்றுப்படையினர் வருதல், 25. யானையைக் கைப்பற்றுதல், 26. மதிலில் உழுது வரகு விதைத்தல், 27. வாள்மங்கலம் கூறுதல், |