பூவின் சிறப்புச் சொல்லுதல், 11. எதிர்த்துவரும் படையைத் தாங்கி இறந்தவனுடைய தலையின் மதிப்பைச் சொல்லுதல், 12. தலையைக் கொண்டு வந்தவனுக்குச் செல்வத்தைக் கொடுத்தல், 13. கணவனுடைய தலையைக் கண்ட மனைவி தன் உயிரைப் போக்கிக்கொள்ளுதல். விளக்கம் : காஞ்சித்திணைக்குரிய விளக்கம் தொல்காப்பியத்தை (புறத்திணை.78) ஒட்டியது. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் விளக்கம் இதனின்றும் மாறுபட்டது. 143. | மாற்றார்சா தலைதுளக்கக் கடவுமற மாற்றார் வருதல்கண்டு புண்கிழித்து முடிதல்பேய் ஓம்பல், ஏற்றுஇறந்தார்க் கண்டுபேய்அஞ் சல்பேய் தொடுதல், இல்லான்புண் ணவற்றொடும்பேய் கடிந்ததொடாக் காஞ்சி, ஆற்றலினென்று இரங்குதல்மட் டீதல்எரி மூழ்கல், அவன்படும்வே லின்இவனும் படுதல்வே லிறைவன் வேற்றரசர் முன்னிருந்து முனைமுரிப்புஎண் மூன்றும் வியந்தகாஞ்சித் துறையா(ம்)மென் மலர்க்கைக் கொடியே. [15] | உரை : 14. பகைவர் சாதலைப்போற்ற மறவர் வருதல், 15. பகைவர் வேல்பட்ட தன்னுடைய மார்பில் புண்ணைப் பிளந்துகொண்டு இறத்தல், 16. வீரனின் திறத்தைக் கண்டு பேய் பரிகரித்தல், 17. இறந்தாரைக் கண்டு பேய் அஞ்சுதல், 18. பேய்புண்ணைத் தொடுதல், 19. புண்ணினைத் தீண்டுவதற்குப் பயப்பட்டுப் பேய் நீங்கிய தொடாக்காஞ்சி, 20. வீரனின் ஆற்றல் இத்தன்மையது என்று புகழ்ந்து மனம் நொந்து இரக்கப்படுதல், 21. மதுவைக்கொடுத்தல், 22. மனைவி எரி மூழ்குதல், 23. வீரன் இறந்துபட்ட வேலினால் அவன் மனைவியும் இறந்துபடல், 24. மன்னன் பகைஅரசன் முன்னே இருந்து போர்க்களத்திலிருந்து போக்குதல் ஆகிய இருபத்து நான்கு துறைகளையும் உடையது காஞ்சித்திணை. |