சுவாமிநாதம்251யாப்பதிகாரம்
 
இனமாக வரும். குறள் வெண்பாவுக்கு இனம், குறள் வெண் செந்துறையும்
குறள் தாழிசையும் ஆகும்.

     ஆசிரியப்பாவுக்கு அகவல் இசையும் ஐவகை ஈறும் அளவடியும்
உரியன. இறுதியடிக்கு முன்னடி (ஈற்றயலடி) சிந்தடியாக (மூன்று சீராக
வருவது) வருவது நேரிசை ஆசிரியப்பா. நான்கு அடியும் முன்பின்னாக
மாற்றினாலும் பொருள் வருவது அடிமறிமண்டில ஆசிரியப்பா.

     பாட விளக்கம் : ‘பெருதல்’ (2வதுவரி) என்ற மூலபாடம் பெறுதல்
என்று திருத்தப்பட்டுள்ளது. ‘உள்ளூற்றால்’ (2-வது வரி) என்ற மூலபாடமும்
உள்ளுற்றால் என்று திருத்தப்பட்டுள்ளது.

158. அடியாவு(ம்) நேர்ஒத்து வரின்நிலைமண் டிலப்பா
     அளவு(ம்) முன்பின் ஒத்துஇடையிற் குன்றல்இணைக்
                                          குறட்பா;
உடனேவெண் பாஅடிப்பின் அகவல்இறின் மருட்பா;
     ஒன்றுஇரண்டாம் அடிநூற்பா அகவல்ஆறு ஆகு(ம்);
நெடியமூன் றடியொத்தல் அகவற்றா ழிசையா(ம்);
     நேர்ஒத்துஈற் றயல்குறைதல், இடைகுறைதல், மடக்கல்,
இடைகுறைந்து மடக்கல்,அக வற்றுறைநான் கடியே
     எய்துகழி நெடில்விருத்தம்;இனம்மூன்றாங் கலப்பே.  [3]

ஆசிரியப்பா வகையும் இனமும் உணர்த்துகின்றது.

     உரை : எல்லா அடியும் தம்முள் ஒத்து நான்கு சீராக வந்தால்
நிலைமண்டில ஆசிரியப்பா. முதலடியும் இறுதி அடியும் நான்கு சீராய்
நடுவே உள்ள அடிகள் இரண்டு சீரானும் மூன்று சீரானும் வருமானால்
அது இணைக்குறள் ஆசிரியப்பா. வெண்பா முதலாக ஆசிரியப்பா
இறுதியாக வந்தால் மருட்பா. ஓர் அடி அல்லது ஈரடியில் வருவது
நூற்பா அகவல். ஆக ஆசிரியப்பா ஆறுவகைப்படும்.