சுவாமிநாதம்256யாப்பதிகாரம்
 

பெயர் கொடுத்துத் தொகுக்கப்படுவது. தொடர்நிலைச் செய்யுள் என்பது ஒத்த
பொருளால் தொடர்ந்து பாடப்படும். அது. 1. பொருள் தொடர்நிலைச்செய்யுள்.
முன்னே உள்ள செய்யுளோடு பின்னே வரும் செய்யுள் சொல்லினால்
தொடர்ந்து வரும்படி அந்தாதித் தொடையில் [அந்தம் (முதல் பாட்டின்
இறுதி) + ஆதி (அடுத்த பாட்டின் முதல்)]பாடப்படும். அது, 2. சொல்
தொடர்நிலைச் செய்யுள் இவ்வாறு இரு வகைப்படும்.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 2 முதல் 6 வரையுள்ள
சூத்திரங்களைத் தழுவியது.

163. அடுத்தபொருட் டொடர்பெருங்காப் பியம்,சிறுகாப் பியமாய்
     அறைவர்;அதின் வரும்பொருள்;வாழ்த்து, இணையிலிஇறை
                                           வணக்கம்,
உடைத்தாய்நாற் பொருட்பயத்தாய், மலை,வாரி,நதி,நாடு
     ஊர்,பருவம், சுடர்த்தோற்ற(ம்) மணங்,கலவி, புலவி
முடிச்சூட்டு;மகப்பேறு, கனிபொழில்ஆ டுதல்,நீர்
     மூழ்கல்,போர், சயம்,அமைச்சு, தூதுஉடைத்தாய்ச், சந்தி
படப்படல, வுறுப் புடைத்தாய்ச் சுவை,பாவம் பொருந்தப்
     பாடுவது தான்பெருங்காப் பியம்எனச்சொல் லுவரே   [2]

இது தொடர்நிலைச் செய்யுளின் விரி உணர்த்துகின்றது.

     உரை : பொருள் தொடர்நிலைச்செய்யுளைப் பெருங்காப்பியம்
சிறுகாப்பியம் என இரண்டு வகையாகக் கூறுவர். அவற்றுள் பெருங்காப்பியம்
என்பது வாழ்த்து, கடவுள் வணக்கம் உடையதாய் அறம், பொருள், இன்பம்
வீடு என்ற நான்கு பொருளைத் தருவதாய் மலை, கடல், நதி, நாடு, ஊர்,
பருவம், ஞாயிறு, திங்கள் ஆகிய இரு சுடர்களின் தோற்றம் ஆகியவை
பற்றிய வருணனைகளும் மணம், கலவி, ஊடல், முடிசூட்டு, பிள்ளைப்பேறு,
சோலைகளில் விளையாடுதல், நீரில் விளையாடுதல், போர் வெற்றி, அமைச்சு,
தூது பற்றிய