|           விளக்கம்     : இது வெண்பாப்பாட்டியல் முதன்மொழியியல் சூத்திரங்கள்      2, 3, ஆகிய இரண்டையும் அடியொற்றியது.                    |         174.  |         மங்கலச்சொற்         பொருள்இன்மை, தலம்இன்மைநாம               வகையுழிபல் பொருள்தோன்றல் சொல்லீறு திரிதல்          அங்கவையா கா;மூன்றுஐந் து,ஏழு,ஒன்பான் ஆகும்,               ஆறுஎட்டு நாலாகா; எழுத்துஅ,ஆ, ஐ,ஒள          இங்கிவையே பால;இஈ குமார;உஊ ராச;               எ,ஏய விருத்தம்;ஒஓ மரண;மன்பே ரரதி          தங்குவது தான்முன்மூன் றாம்பின்இரண் டாகா,               சார்குறிலாண் நெடிற்பெண்இவை உறழ்ச்சியும்பா லறியே                                                        [13] |                 சொல், எழுத்து, தானம்,     பால் பொருத்தங்களை விளக்குகின்றது.           உரை     :     சொற்பொருத்தம் என்பது முன்னே சொன்ன மங்கலச்      சொற்களில் பொருள் இல்லாதனவும், நலம் இல்லாதனவும் வகையுளியைச்      சேர்ந்தனவும் பலபொருட்கு ஏற்ற சொல்லும், ஈறுதிரிதல் ஆகியனவும்      வராமல் பாடுவது.           மூன்று (இ), ஐந்து     (உ), ஏழு (எ), ஒன்பது (ஐ) ஆகிய எழுத்துக்கள்      முதன்மொழியில் வருவது நன்று. நான்கு (ஈ) ஆறு (ஊ) எட்டு (ஏ) ஆகிய      எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வருவது தீது. இது எழுத்துப்பொருத்தம்      ஆகும்.               அ, ஆ, ஐ, ஒள ஆகிய     நான்கு எழுத்துக்களும் பால (சிறியவர்)      எழுத்து என்றும், இ, ஈ, என்ற இரண்டும் குமார (இளைஞர்) எழுத்து      என்றும், உ, ஊ, என்ற இரண்டும் அரச எழுத்து என்றும், எ, ஏ என்ற      இரண்டும் மூப்பு எழுத்து என்றும், ஒ, ஓ என்பன மரண எழுத்து என்றும்      தானங்களாக வகுப்பர். தலைமகனது இயற்பெயரின் முதலெழுத்தின் கூற்றைத்      தொடங்கி முதல் மூன்று தானங்களாகிய பாலன் குமாரன். அரசன்      என்பவற்றுள் ஒன்றாய்       |