உரை : 27 நாளையும் (நட்சத்திரத்தையும்) ஒன்பது ஒன்பதாக மூன்று கூறாக்கிப் பாட்டுடைத் தலைமகனின் இயற்பெயரின் முதல் எழுத்தின் நாளைத் தொடங்கிக் கூறுகளை எண்ண ஒன்று மூன்று, ஐந்து, ஏழுவரின் பொருந்தா. அல்லாத நாட்களுள் பாட்டுடைத் தலைவன் பெயர் முதல் எழுத்தின் இராசி தொடங்கி எட்டாம் இராசி நாட்களும் வயினாசியமாகியமும் பொருந்தா. வல்லெழுத்துக்களும் ஒ நீங்கிய குற்றெழுத்துக்களும் தெய்வ கதி. ஆ, ஈ, ஊ, ஏ ஆகிய நான்கு நெட்டெழுத்துக்களும் மெல்லெழுத்துக்களும் மக்கள் கதி இந்த இரண்டும் முன்மொழிக்கு நன்மை உடையவாம். ய, ர, ல, ள, ற ஆகியவை மிருக கதி. பிற எழுத்துக்கள் நரகர் கதி. பாட விளக்கம் : ‘நாண மத்திமம்’ (1-வது வரி) என்ற மூலபாடம் ‘நாண் மத்திமம்’ என்று திருத்தப்பட்டுள்ளது. ‘காம மிருக’ (4-வது வரி) என்பது மூலத்தில் தெளிவாகத் திருத்தப் படாமல் உள்ளது. முதலில் ‘காய்’ என்று எழுதியதைப் புள்ளியை அடித்து விட்டு யகரத்தையும் திருத்தியுள்ளார்கள். ஆயினும் ‘ம’ என்று தெளிவாகப் படிக்க முடியாத நிலையில் உள்ளது. 177. | இலகுநேர்,கு ருநிரை;நப்ப தசகணம், வெண்சீர் இப்பலன்வா ணாட்,புகழசூ னிய,நோயாம்; வஞ்சி அலகிடுசீ ரேச,ர,ம,ய கணம்இதின்பலன் கேடு, அழிவுதிரு, மகிழ்ச்சியாம்; சுவற்க மதி,வான், மலர்பருதி, வெண்சீர்முன்; வளி,அனல்,பார், புனலே, வஞ்சிச்சீர்,பின் பொருந்தும்;பிற வாகா; இயற்சீர் நலபிரமன், திரு,வரசன், கருடன்;முழு வதுமாம் நவின்றதிற்கா ணாவிதிஉத் தியின்அமைத்துக் கொளலே. [16] | இது கணம் உணர்த்துகின்றது. |