|         178.  |         அமைத்தனநற்         பொருத்தவிதி; இனிப்பாகம் என்ப               தவ்விருசெய் யுளிற்கவுடம், வைதருப்பம் எனவாங்          குமைத்தவண்ணம் வகுப்பு,மிறைக் கவி,ஒவ்வோ ரினமே               கூர்ந்தசெறி வெழுத்துடன்சொற் செறிவு,வழி மோனை          சிமிழ்த்தவழி யெதுகைதிரி வொடு,மடக்கு, முதலாய்ச்               செம்மையின்றிச், சொற்குஅரிதாம், கஷ்டம்இவ்வா றன்றித் தமிழ்த்திறத்தில் அமிழ்தம்போற் செவிக்குஇனிமை காட்டும்  		     தனிமதுர பாகம்என்பர் வைதருப்பந் தனையே  		[17] | 	 	 		இது பாகம் உணர்த்துகின்றது.		      உரை : இதுவரை பொருத்த விதி கூறப்பட்டது. ‘பாகம்’ என்பது          கவுடம், வைதருப்பம் என இருவகைப்படும்.		      வண்ணம், வகுப்பு, இறைக்கவி, செறிவெழுத்து, சொற்செறிவு,          வழிமோனை, வழியெதுகை, திரிவு, மடக்கு முதலியனவும் செம்மையாகச்      சொல்லாமல் சொல்லுவதற்கு அரியதாய் அமைவது கவுடநெறி.		      அவ்வாறின்றித் தமிழ் முறையில் அமிழ்தம்போலச் செவிக்கு          இனிமையை ஊட்டக்கூடிய தனித் தன்மையான இனிய பாகமே வைதருப்பம்      எனப்படும்.		      விளக்கம் : இது தண்டியலங்காரம் 13, 14, 15 ஆகிய சூத்திரங்களைத்          தழுவியது.	 	 |