பலபுகழ்தற் மேம்பாட்டு ரை;குறிப்பை உரைத்த பயன்தோன்றப் பிறிதுரைத்தல் பரியாயம்; பொருளின் தலைபரிமா றுதல்பரிவர்த் தனை;பண் பாதித் தன்குறைமெய்ப் படஉரைக்கும்பொருள்விசே டமதே. [13] | சமாயுதம், விபாவனை, தன் மேம்பாட்டு உரை, பரியாயம் பரிவர்த்தனை, விசேடம் ஆகியவற்றை விளக்குகின்றது. உரை : முன்பு கான் முயன்ற தொழிலினது பயன் அத்தொழிலால் அன்றி வேறு ஒரு தொழிலால் நிகழ்ந்ததாகக் கூறிமுடிப்பது சமாயுத அணி. ஒன்றினுடைய தொழிலை உரைக்கும்போது அத்தொழிலுக்குப் பலரும் அறிந்துள்ள காரணத்தை ஒழித்து வேறொரு காரணத்தைக் கூறும்போது அது குறிப்பாக வெளிப்படுமாறு கூறுவது விபாவனை அணி. ஒருவன் தன்னைத்தானே பலவாறாகப் புகழ்ந்து கொள்வது தன்மேம்பாட்டு உரை அணி. தான் நினைத்த குறிப்பைக் கூறாமல் அப்பொருள்தோன்றப் பிறிது ஒன்றைக் கூறுவது பரியாயஅணி. பொருள்கள் ஒன்றைக் கொடுத்து ஒன்று கொண்டனவாகச் சொல்வது பரிவர்த்தனை அணி. பண்பு, தொழில் முதலாயின குறைபடுதல் காரணமாக அப்பொருளுக்குச் சிறப்பு இருப்பதாகக் கூறுவது விசேட அணி. விளக்கம் : இது 73, 51, 71, 72, 85, 79 ஆகிய தண்டியலங்காரச் சூத்திரங்களைத் தழுவியது. சமாயுதத்தைச் சமாகிதம் என்று தண்டியலங்காரம் கூறும். பாட விளக்கம் : உறைத்த (3 வது வரி) என்ற மூலபாடத்தை உரைத்த என்று கொள்ளவேண்டும். |