சுவாமிநாதம்30எழுத்ததிகாரம்
 

ர, ழ ஆகிய இரண்டு  மெய்கள் தவிர ஏனைய பதினாறு மெய்கள் உடனிலை
மெய்ம்மயக்கமாகவும் வரும்.

     உயிர் மெய்யெழுத்துக்கள் அந்தந்த மெய்யெழுத்துக்கள் போன்று
மயங்கும்.

     ய, ர, ழ என்ற மூன்று மெய்யெழுத்துக்களும் க, ச, த, ப, ங, ஞ, ந,
ம ஆகியவற்றோடு இரண்டு மெய்யெழுத்துக்களின் இயல்பில் வரும்.

     விளக்கம் : மொழி முதல் எழுத்துக்கள்

உயிர்: அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, ஏடு, ஐந்து,
ஒன்று, ஓடு, ஒளவியம்.
  
க: கடை, காடை, கிளி, கீழ், குலை, கூன், கொடை, கோடு, கைப்பு,
கொல், கோல், கௌ.
  
ச: சடை, சாந்து, சிரி, சீற்றம், சுற்றம், சூடு, செல், சேல், சைவம்,
சொல், சோலை, சௌமியா
  
த:  தகடு, தான், தின், தீனி, துணி, தூண், தெரு, தேர், தையல்,
தொடு, தோடு, தௌவியம்
  
ந: நகரம், நான், நினை, நீடு, நுனி, நூல், நெல், நேர், நைப்பு,
நொந்து, நோய், நௌவி.
  
ப: படை, பாடு, பிடி, பீடை, புல், பூக்கள், பெட்டி, பேன், பையன்,
பொடி, போடு, பௌவம்.
  
ம:. மலை, மாலை, மிளகு, மீதி, முன், மூன்று, மெல், மேல், மைந்தர்,
மொட்டு, மோர், மௌவல்
  
வ: வடை, வாடை, விலை, வீடு, வெல், வேல், வையம், வௌவால்.
  
ய:யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
  
ஞ:ஞமலி, ஞாயிறு, ஞிமிறு, ஞெண்டு, ஞேயம், ஞொள்கு.
  
ங:அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம்.