|           விளைஞ்சி |           -           விளஞ்சி  |                            |           அமையம் |           -           அமயம்.  |                     க என்பது க் என்ற மெய்யெழுத்தைக்     குறிக்கும்போது அ என்பது எழுத்துச்      சாரியை      அகரம், ஆகாரம், ஐகான்     - என்பனவற்றில் கரம், காரம், கான் ஆகியன      உயிர் எழுத்துக்களோடு வரும் எழுத்துச்சாரியை.           மெய்ம்மயக்கம்     தனிமொழியிலும் புணர்மொழியிலும் கொள்ள வேண்டும்      என்பார் இளம்பூரணர். புணர்மொழியில் வருவது புணர்ச்சி இலக்கணத்தில்      விளக்கப்பட வேண்டும் என்று கூறித் தனிமொழியில் வருவது மட்டுமே      கொள்ள வேண்டும் என்பார் நச்சினார்க்கினியர். தனிமொழியில் உதாரணம்      கிடைக்காதபோது பண்புத்தொகைச் சொல்லும் வினைத்தொகைச் சொல்லும்      தனிமொழியாகக் கருதலாம் என்று கூறி அவற்றிலிருந்து சில உதாரணங்களை      எடுத்துக் கொண்டு ஏனையவை ‘தொல்காப்பியர் காலத்து இருந்து பிற்காலத்து      வழக்கு ஒழிந்தன’ என்று அமைதி கூறியுள்ளார் நச்சினார்க்கினியர்.      வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் தமது எழுத்ததிகார ஆராய்ச்சி      உரையில் சில மெய்ம்மயக்கங்கள் பிற்காலத்து வழக்கு ஒழிந்து போய்விட்டன      என்பதை ஒத்துக்கொள்ளவில்லை.           மொழியியலார் தனிமொழியில்     வரும் மெய்ம்மயக்கமே கொள்ள      வேண்டும் என்று கொள்கின்றனர். தனிமொழி என்பது பகாப்பதமாக வருகிற      தனி மொழியை மட்டுமே குறிக்கும்.           பொதுவாக எழுத்தியல்     ஆராய்ச்சி செய்ய உதாரணங்கள் (Data)      நிறையத் தேவைப்படாது. தமிழ் இலக்கியம் பரந்துபட்டு இருப்பினும்      அவற்றிலும் பல மெய்ம்மயக்கங்கள் வரவில்லை என்றால் அவை இறந்து      போய் விட்டன என்று சொல்லி விட முடியாது. எனவே இதற்கு வேறு      ஏதாவது ஒரு காரணம் அமைந்திருக்க வேண்டும்.   |