சுவாமிநாதம்38எழுத்ததிகாரம்
 

விளக்கம் :

     பூ-ஒரு எழுத்து ஒருமொழி

பலா
மலர்
கடவுள்
பல எழுத்து ஒருமொழி

     நடந்தான் - பகுபதம், நட+(ந்)த்+ஆன்

     பாரம் - பெயர்ப்பகாப்பதம்

     ஆரம்பி - வினைப்பகாப்பதம்

     கொல் (ஐயப்பொருள்) - இடைப்பகாப்பதம்

     நனி - உரிப் பகாப்பதம்

     தலைவன் - பெயர்ப்பகுபதம்

     வாழ்வான் - வினைமுற்றுப்பகுபதம்

     வாழ்ந்து - வினையெச்சப்பகுபதம்

     வாழ்ந்த - பெயரெச்சப்பகுபதம்

     வாழும் - (வாழ்+உம்): பகுதியும் விகுதியும் கொண்டது.

செய்தான்  (செய்+த்+ஆன்): பகுதி, இடைநிலை, விகுதி கொண்டது.

உண்டனன் (உண்+ட்+அன்+அன்): பகுதி, இடைநிலை, சாரியை,
          விகுதி கொண்டது.

பிடித்தனன் (பிடி+த்+த்+அன்+அன்): பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை,
          விகுதி கொண்டது

செத்தனன் (சா+த்+த்+அன்+அன்): பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை,
          விகுதி கொண்டு பகுதியில் விகாரம் ஏற்பட்டது.

பகுதி என்பது சொல்லின் அடிப்படைப் பொருளைத் தரும் கூறு ஆகும்.
இதை அடிச்சொல் (Root) என்றோ விகுதி