சுவாமிநாதம்56எழுத்ததிகாரம்
 
1.   பகல் + இரவு = பகலிரவு - மெய்முன் உயிர்வரப் பொருந்துதல்.
2.   கல் + இல்லை = கல்லில்லை - தனிக்குறில் முன் உயிர் வர இரட்டல்.
3.   தகடு + அரிது = தகடரிது - குற்றியலுகர முன் உயிர் வர உகரம் கெட்டு
    மெய்யும் உயிரும் பொருந்துதல்.
4.   பலா + காய் = பலாக்காய் - தான் மிகுதல்.
5.   மா + காய் = மாங்காய் - இனம் மிகுதல்.
6.   இரா : இர - (இரவில் = இர + இல்) ஈற்று உயிர் குறுகியது.
7.   நிலவு - குறுகி உகாரம் ஏற்றது.
8.   மக + அத்து = மகத்து - வருமொழி முதல் கெடல்.
9.   நீ + கை = நின்கை - முதல் கெட்டது.
10.  பத்து + இரண்டு = பன்னிரண்டு - முதலலது ஏகியது.
11.  இரண்டு + பத்து = இருபது - இடை ஏகியது.
12.  ஆடு + கால் = ஆட்டுக்கால் - இடை மிகுந்தது.
13.  ஒன்பது + பத்து = தொண்ணூறு - சொல் கெட்டது.
14.  பொருந் + கடிது = பொருநுக்கடிது - ஒற்று உகரம் ஏற்றது.
15.  ஈற்றயல் ஒற்று இரட்டியதற்கு உதாரணம் தெரியவில்லை.
16.  நீயிர் + ஐ = நும்மை - பல குறுகியது.
17.  பலா + கோடு = பலாஅக்கோடு - அளபு ஏற்றது.
18.  வேட்கை + அவா = வேணவா - உயிர்வரின் டகரம் ணகரமாக மாறிப்
    பொருந்தியது.

     பல கெடுதல், உயிர்வரின் ட, ண ஆகல் என்பவற்றிற்குரிய
உதாரணங்களின் பொருத்தம் ஆராய்தற்கு உரியது.