47. |
வினை,வினைபேர் இடையுரியிற் பிறந்து,முத னிலையே விதித்தொழிற்பேர் வினைமுற்றுஈ ரெச்சம்என ஐந்தாய்த்; தனிவினையுந் தொடர்வினையு மாகும்முத னினையே தனிவினை;மற் றையவைதொடர் வினைகள்;தனி வினையே உனு தொழிற்பேர், முற்றெச்சஞ் கருத்தன்முத லாதல், உருபேற்றல், படுவினைகுன் றாமை,குன்றல், பொதுவே பனும்இடங்குன் றாமை,பகாப் பதம்பகுதி யாதல் பலபொருட்கு ஒன்று;ஒருபொருட்கே பலவிதெல்லாந் | |
தொடுமே. (1) |
| வினைச்சொல்லின் பொது இலக்கணமும் தனிவினையின் இலக்கணமும் கூறுகின்றது. உரை : வினை, பெயர், இடை, உரி ஆகிய நான்கு சொற்கள் அடியாக வினைச்சொல் பிறக்கும். அது முதனிலை, தொழிற்பெயர், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் என ஐந்துவகைப்படும். தனிவினை, தொடர்வினை எனப் பெரும் பிரிவு இரண்டாகும். முதனிலைமட்டும் தனிவினையாகும். மற்றவை தொடர்வினை ஆகும். தனிவினை என்பது தொழிற்பெயர், முற்று, எச்சம், கருத்தாவாதல், உருபேற்றல், செயப்படுபொருள் குன்றாமை, செயப்படுபொருள் குன்றல், பொதுமை, இடங்குன்றாமை, பகாப்பதத்தின் பகுதியாதல், பலபொருட்கு |