சொல்லுதல்) 31. இறப்பு அகற்றல் (முற்கால வழக்குகளுள் பிற்காலத்து வழக்கில் ஒழிந்தவற்றை நீக்கி விடுதல்) 32. எதிர் போற்றல் (முற்காலத்து வழங்காது பிற்காலத்தில் வழக்கில் வந்ததை ஏற்றுக் கொள்ளுதல்) ஆகிய முப்பத்திரண்டு உத்திகளையும் கொண்டு நூலால் அறிவிக்கப்படும் பொருளை நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் பொருந்த எடுத்துக் காட்டி ஏற்கும் இடத்தை அறிந்து இன்னதற்கு இதுஎன்று பொருந்தும்படிக் கூறுவது தந்திர உத்தியாகும். விளக்கம் : இதுவும் முன்னுள்ள சூத்திரமும் நன்னூல் 14-ஆம் சூத்திரத்தை ஒட்டியன. 12. | உய்த்தபொருள் ஓரினஓத் தாம்விரைவிற் படலம் உருக்காட்டு மாடியிற்சில் லெழுத்தேபல் பொருளும் ஒய்த்துநுட்பந் திட்பம்உறுஞ் சூத்திரஞ்சூத் திரத்தின் மொழிப்பொரு ளேகருத்து உதாரணம்வினா விடையாற் பெற்றபொருட் படுங்காண்டி; சூத்திரத்தின் பொருளும் பிறநூலாற் றன்னுரையாற் காண்டியொடு ஐயம்அகற் றிடச்சொல்வது விருத்தி; இத்துணைநூலியல் கண்டு ஆய்த்துரைபோ தனைமதி மற்றால்அறி கதமிழே. (11) | இது ஓத்து, படலம், சூத்திரம், உரை ஆகியவற்றையும் விளக்குகின்றது. உரை : ஒரே இனத்தைச் சார்ந்த பொருள்களை ஒரு வழிபடச் சொல்வது ஓத்து. பல பொருள்களையும் கலந்து கூறினால் அது படலம். (பார்க்கும்) உருவத்தைக் காட்டும் கண்ணாடி போன்று சில எழுத்துக்களால் பலவகைப்பட்ட பொருளையும் செறிவாக அடக்கிப் பொருள் நுணுக்கங்களும் குற்றம் இல்லாத சொல்வளமும் பொருள்வளமும் பொருந்தி விளங்குவது சூத்திரம். |