சுவாமிநாதம்15
 

2. எழுத்ததிகாரம்

1. எழுத்தாக்க மரபு

13. தமிழ்தருதென் பொதிகைமலை கயிலைமலை கமலஞ்
     சங்கம்இவற்று இறைவருக்குப் பொருளைஅருள் வாயால்
உமிழ்குருவாய் ஆறெழுத்தோர் எழுத்தாகுஞ் செந்தூர்
     ஒருகுமரன் இருசரண்என் உளத்து(உ)றைந்த வளத்தாற்
சிமிழ்அனைய களபமுலைப் பூமயிலே முதியோர்
     செப்பெழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனும்ஐந்
தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொருமூன்று இயலாய்
     அடக்கிமொழி குவன்;சுவாமி நாதம்இந்நூற் பெயரே.    (1)

இறை வணக்கமும் நூலில் கூறப்படும் செய்திகளும் நூலின் பெயரும்
கூறுகின்றது.

     உரை : தமிழ்தந்த தென்பொதிகைமலை வாழும் அகத்தியரும்
கயிலைமலை வாழும் சிவபெருமானும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்
சங்கத்தாரும் ஆகிய நால்வருக்கும் அவரவர் விரும்பும் பொருளைத் தனது
அருள்பொருந்திய வாயினால் உபதேசித்த குருமூர்த்தியாகிய ஆறு எழுத்தும்
(சரவணபவ) ஓர் எழுத்தாய்க் கொண்டு திருச்செந்தூரில் வாழும் முருகக்
கடவுள் என்னுடைய உள்ளத்துத் தங்கிய காரணத்தால் பெரியோர் கூறுகின்ற
எழுத்து, சொல்,