சுவாமிநாதம்151சொல்லதிகாரம்
 

     இரண்டுக்கு மேற்பட்ட சொற்களில் ‘படு’ என்னும் சொல் மறைந்து
வந்து அப்பொருளைத் தந்தால் படுதொகை எனப்படும்.

விளக்கம் :

வேற்றுமைத்தொகை : தலைவணங்கினான்-தலையால் வணங் கினான் -
                  மூன்றாம்  வேற்றுமை உருபு தொக்கு வந்தது.

உவமைத்தொகை   : பவளவாய் - பவளம் போன்ற வாய்.

உம்மைத்தொகை   : கபிலபரணர் - கபிலரும் பரணரும்

வினைத்தொகை    : தின்பண்டம்.

பண்புத்தொகை    : செந்தாமரை

அன்மொழித்தொகை : கருங்குழல் - கருமையான குழலை உடையவள் -
                   பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
                   தொகை.

படுதொகை        : பால் கறந்தது - பால் கறக்கப்பட்டது.

தொகைகளின் இலக்கணம் சற்றுப் புதுமையாக உள்ளது.

67. தொக்குழி இன் மயங்கும் இரண்டாதி ஏழ்வரைக்குஞ்
     சொற்பொருளே தொகைப் பொருள்; மூன்று ஒன்றாமற்றாகா;
தக்கிய முன்மொழி பின்மொழி இருமொழி அன்மொழியாய்ச்
     சாற்றல் தொகைநிலையா (ம்);முற்று, ஈரெச்சம், பெயரின்
மிக்க உருபேறல், இடை, உரி, அடுக்காதியவே விரிதொகா
     நிலைதொடர்தான்; பலதொடர் ஓர் தொடராம்;
எக்கும் அடுக்கு அசைக்கு இரண்டு; எண், பொருணிலை மேன்
                                            மூன்றாம்
     இசைநிலை நான்கினும் ஆகும், இரண்டு இடத்தும் என்னே.
                                                (14)

தொகையை விரிக்கும் முறையும் சில தொகாநிலைத் தொடரின்
வகைகளும் விளக்குகின்றது.