விளக்கம் : இது அகப்பொருள் 154.9 முதல் 156 வரையுள்ள சூத்திரங்களைப் பின்பற்றி எழுந்தது. பாட வி : முன்னிலைப் புறச்சொல் (முதல் வரி) என்பதே சரியான பாடம், ஆனால் ‘முல்லையின்’ என்பது சரியெனக் கருதி சொற்’ என்பது ‘சேரற்’ என்று மூலபிரதியிலேயே திருத்தப்பட்டுள்ளது. ‘செல்ல’ (3வது வரி) என்று மூலத்தில் உள்ளது ‘செல்லல்’ என்று திருத்தப் பட்டுள்ளது. 99. | பகர்வேண்டல், மறுத்தல்,உடன் படல்,கூட்டல், கூடல், பாராட்டல் உயங்கல்,நீங் குதல்,எட்டு வகைத்தாய்; மகிழ்நன் இருட்குறிவேண் டல்,பாங்கி நெறிஅருமை வகுத்தல் இறைநெறிஎ ளிமைசொல், அவன்நாட்டு அணியைச் சகிவினவல், அவன்அவள்நாட் டணிவினவல், அவற்குச் சகிகூறல், இறைகுறிப்புஏந் திழைக்குஇயம்பல், நேராது அகமொடுகூ றுதல்;சகிபால் நேர்ந்துஉரைத்த(ல்),நேர்ந்து அவற்குஇயம்பல், குறியின்நிறீஇத் தாய்துயில்ஓ ருதலே. [15] | இரவுக்குறி விளக்குகின்றது. உரை: 1. வேண்டுதல் 2. மறுத்தல் 3. ஒத்துக் கொள்ளுதல் 4. கூட்டுதல் 5. கூடுதல் 6. கூடுதலைப் பாராட்டுதல் 7. வருந்துதல் 8. நீங்குதல் என எட்டு வகைப்படும் இரவுக்குறி. 1. தலைவன் இரவுக்குறி வேண்டுதல் 2. தோழி வரும் வழியிலுள்ள துன்பங்களைக் கூறுதல், 3. தலைவன் வரும் வழியில் துன்பம் இல்லாமையைக் (எளிமையைக்) கூறுதல், 4. அவனுடைய நாட்டு அழகு முறையைத் தோழி கேட்டல், 5. தலைவன், தலைவி நாட்டு அழகு முறை வினவுதல், 6. தலைவனுக்குத் தோழி தன்னாட்டு அழகு முறையைக் கூறுதல், 7. தலைமகனுடைய உள்ளக் கருத்தினைத் தலைவிக்குத்தோழி கூறுதல் 8. தலைமகள் ஒத்துக்கொள்ளாது தன் நெஞ்சோடு பேசுதல், 9. ஒத்துக் கொண்டு தோழியோடு சொல்லுதல், 10. தலைவி ஒத்துக் |