125. | உரியபயந் தோன்,தம்முன் சேரியார்நோய் அறிவோர், ஊர்அயலோர், இவர்மொழிமுன் னிலையின்நிக ழாவாம்; தருநற்றாய் இறைஇறைவி யுடன்வெளியிற் கூறாள் தாய்உடன்போக்கு உணர்ந்தபின்பு செவிலி,தெய்வம், அயலோர், இருபிறப்போர், சகி,அறிஞர், நோய்அறிவோ ருடனு மியற்செவிலி இவரோடும் தாயொடும்கூறற்கு அமையும் அரியகண்டோர் இறைவிசகி யாபெற்றோர்க்கு உரைப்பார் அணைசொல்லுஞ் சுரத்துஇறைவிக்கு இறைதமர்காண் பொழுதே. [41] | கூற்றுக்குரியோர் பற்றி விளக்குகின்றது. உரை: தந்தை, உடன் பிறந்த அண்ணன், நோய் அறிவோர், ஊரவர், அயலோர் ஆகியவர்கள் முன்னால் கூற்று நடைபெறாது. தாய் தலைவனோடும் தலைவியோடும் நேரே பேசமாட்டாள். தலைவனுடன் தலைவி சென்றது உணர்ந்த பின்னரே செவிலி தெய்வம் அயலோர் இருபிறப்போர் (அந்தணர்). தோழி, அறிவோர், நோய் அறிவோர் ஆகியோருடன் தாய் பேசுவாள். செவிலி மேலே கூறப்பட்டவர்களோடும் தாயோடும் பேசுதற்குரியவள். தலைவி, தோழி, பெற்றோர் ஆகியோருடன் கண்டோர் பேசுவர்;பாலைவனத்தில் தலைவியின் சுற்றத்தாரைக் கண்டபோது தலைவன் தலைவியர் பற்றிக் கூறுவர். விளக்கம் : இது நம்பியகப்பொருள் 215, 218, 219, 220, 221 ஆகிய சூத்திரங்களின் தழுவல். பாட விளக்கம் : செரியா (நோய் அறிவோர் முதல்வரி) என்ற மூலபாடம் அகப்பொருளை ஒட்டி (215) சேரியார் என்று திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. 126. | காணும்இடந் தொறும்இங்ஙன் கூறாதார், எவருங் காளைகன்னி யொடும்உரைப்பார் காமமிகு தியினால் வாணுதலும் இறைவனுஞ்சொல் வனபோற்கேட் பனபோல் மறுப்பனபோல் அஃறிணைப்பண் பினவொடு(ம்) நெஞ் சோடுமே | |