வீணுரையாய், உவமஉரு பகமயங்கச் சொலுவார்; விளம்பும்அனை வருந்தாந்தம்மொடுசொல்லும் உளவா பூண்இறைவி இறைவன்கூற் றனைவோரும் கேட்பர் புகலனைவோர் கூற்றும்அவர் கேட்பர்இடம் அறிந்தே [42] | கூற்று பற்றிய சில விதிவிலக்கும் கேட்போர் பற்றியும் விளக்குகின்றது. உரை: கூற்றிற்குரிய ஏனையோர் தலைவனோடும் தலைவி யோடும் அவர்களைக் காணும்போதெல்லாம் உரைப்பர். காம மிகுதியினால் தலைவனும் தலைவியும் அஃறிணைப் பொருள்களோடும் தங்கள் நெஞ்சோடும் அவை சொல்வன போலவும் கேட்பன போலவும் மறுப்பனபோலவும் வீண் உரையாய் உவமையும் உருவகமும் மயங்கும்படி பேசுவார். கூற்றிற்குரிய அனைவரும் தம்மோடு தாமே பேசுதலும் உண்டு. தலைவி பேச்சையும் தலைவன் பேச்சையும் கூற்றிற்குரிய எல்லோரும் கேட்பர். அவ்வாறே ஏனையோருடைய பேச்சையும் இடம் அறிந்து தலைவனும் தலைவியும் கேட்பர். விளக்கம் : இது நம்பியகப்பொருள் 222 முதல் 226 வரையுள்ள சூத்திரங்களின் தழுவல். 222-ஆம் அகப்பொருளில் வரும் ‘சாற்றா எழுவரும்’ என்பதைப் பின்பற்றிக் கூறாதார் என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. 127. | இடம்கரும(ம்), நிகழ்இடமாம்; பொருள்நிகழ்வு தோற்றும், இறப்புநிகழ் வுஎதிர்மூன்றுங் காலமதாம் உணரார் அருங்குறியாற் பொருள்தோன்ற முடிப்பதுமெய்ப் பாடாம் அழுகை,நகை, மருட்கை,அச்சம், பெருமிதமே, யுவகை உடன்சினமே இளிவரல்எட் டால்அதுதான் விரியும், உரைகுறிப்பாற் சொலிமுடித்தல் எச்சமதாம்; இதனாற் படும்பயன்ஈது என்றுபொருள் தொகுத்துஉணர்த்தல் பயனாம் பணிமொழிஈங்கு இவர்க்குஉரித்தென்று எண்ணுதல்முன் னமதே. [43] | |