கரந்தையின் எஞ்சிய பகுதியை விளக்குகின்றது. உரை: 9. போர்க்களத்தில் வீரர்கள் இறத்தல், 10. போரிடுகின்ற வீரரைஎதிரே விலக்கித்தான் ஒருவனுமே வீரரை வெட்டும் ஆளெறிபிள்ளை, 11. துடி ஒலிக்கத் தன் புண்ணைப்பிரியப்பட்டு விரும்பிக் கூத்தாடும்பிள்ளைத் தெளிவு, 12. பகைவருடைய குடரை மாலையாகச் சூட்டிக் கையிலே வேலை வைத்துக்கொண்டு ஆடும் பிள்ளையாட்டு, 13. வீரர்கள் போரில் இறந்ததைக் கண்டு வருந்துதல், 14. வீரன் தன்னுடைய மேம்பாட்டை உயர்த்திச் சொல்லுதல், 15. வீர னுக்கு மன்னன் பரிசு அளித்தல், 16. மன்னனின் சிறப்பை வீரர் புகழ்தல், 17. வீரர்களது குடியின் வரலாற்றினைச் சொல்லுதல், 18. பசுக்களை இடம் மாற்றுதல், 19. போரை விலக்குதல், 20. ஆநிரைகளைக் கொண்டு செல்லுதல், 21. நிரை மீட்டோர் வரவு தெரிதல், 22. ஊர்ப்புறத்துத் தாம் கொண்ட நிரையை நிறுத்தல், 23. நிரையைப்பங்கிட்டுக் கொள்ளுதல், 24. உண்டு மகிழ்தல், 25. வெற்றியால் விளைந்த கொடை. 26. துடிநிலை, 27. கொற்றவை நிலை, என இருபத்தேழு துறையை உடையது. வெட்சி இருபத்திரண்டும் கரந்தை இருபத்தேழும் சேர்ந்து 49 துறையும் வெட்சித் திணை விரி என்று கூறுவர். விளக்கம் : இது புறப்பொருள் வெண்பா மாலை 2ஆம் சூத்திரத்தையும் தொல்காப்பியம் புறத்திணையியல் 58ஆம் சூத்திரத்தையும் தழுவியது. பாட விளக்கம் : ‘உயத்தல்’ (2வது வரி) என்ற பாடம் உய்த்தல் என்று திருத்தப்பட்டுள்ளது. 132. | முல்லையது புறம்வஞ்சி, பகைமேற்சென்று அடலா(ம்); முதல்வன்வஞ்சி ஆடல்படை யொலி,குடைநாட் கோளே, செல்லுமவர் நாட்கோள்கொற் றவைநிலை,வே லுழவர் செய்தொழில்கூ றுதல்,இறையை வழுத்துகொற்ற வஞ்சி, | |