பாட விளக்கம் : ‘குதிரை மறம்’ (2 வது வரி) என்பதும் ‘துரை’ (4வது, வரி) என்பதும் மூலபாடங்கள். 138. | நின்றுஒருவன் இரிபடைப்பி னருங்குஎருமை மறமே, நெய்வேல்போட்டு உடல்வலியால் அடர்ஏம வெருமை, அன்றிநெஞ்சில் வேல்பறித்த நூழிலே நூழில் ஆட்டுமுன்றேர்க் குரவை,பின்றேர்க் குரவைபே யாட்டே, மன்றகளிற் றொடுபடுத்தல், வயவர்மன் னோட்டும் வாளமலை, நெடுந்தகைபோர்ப் பொலிதானை நிலையே, வென்றிவேல் கணைமொய்ப்ப உடல்தீண்டா அச்சம் வீழ்புயத்தை மாதர்புல்லும் சிங்கார வாழ்வே. [10] | தும்பைக்குரிய துறைகளை விளக்குகின்றது. உரை: 13. புறமுதுகிட்ட தன்னுடைய படைக்குப் பின் நிற்கும் எருமை மறம், 14. தான் வேலைக் கீழேபோட்டு விட்டுத் தன்னுடைய உடம்பின் வலிமையால் பின்னரும் வெற்றி கொள்ளும் ஏமவெருமை, 15. தன் நெஞ்சில் இருந்த வேலைத் திரித்து ஆடும் நூழில், 16. அந்த வேலைப் பறித்து எறியும் நூழிலாட்டு, 17. மன்னனுடைய தேர்முன் வீரர் ஆடும் முன் தேர்க்குரவை, 18. தேர்ப்பின்னே பாணிச்சியர் முதலானோர் ஆடும் பின்தேர்க்குரவை, 19. தேரின் முன்னும் பின்னும் பேய் ஆடுதல், 20. வேல் படுதலால் வீழ்ந்த யானைக் கீழ்ப்படுத்தல், 21. வாள் வீரர் அரசன் வாளோடு ஆடும் வாளமலை, 22. வீரர்கள் போர்க்களத்தைச் சிறப்பிக்கும் தானை நிலை, 23. வேலின் அம்பு மார்பைத் தீண்டிய போது உடல் நிலத்தைத் தீண்டாத (வேல்பட்டபோதும் தரையில் வீழாத) அச்சம், 24. இத்தகைய வீரரின் தோள்களை மாதர் தழுவும் சிருங்கார நிலை. 139. | வாள்வடுமெய் கண்டுகேள்க லுழும்உ வகைக் கலுழ்ச்சி மன்னிறப்ப முரணின்இறந் திடல்கணவற் காண நீள்குழலி வரல்இருகோன் சுற்ற(ம்)முற்றும் இறத்தல், நிகழ்த்துஇருபான் எட்டும்தன் துறையாகும். பாலைக்கு ஆள்புறமே வாகைபகை முடித்திடும்வெற் றியதாம்; அமர்முடித்து வாகைசூடு தல்இகன்றோர் கண்ணி தாள்கழல்கச்சு இனிப்புனைவோம் எனல்அரச வாகை முரசுநிலை, இறையுழவன் எனும் மறக்கள வழியே [11] | |