தும்பைத்திணையின் ஒழிபும் வாகைத்திணையின் துறைகளும் விளக்குகின்றது. உரை : 25. வாளால் ஏற்பட்ட விழுப்புண் உடைய கணவனைக்கண்டு மனைவி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தல், 26. தன்னுடைய அரசன் இறந்தானாக வீரன் முரணால் இறந்திடல், 27. கணவனைக் காண மனைவி வருதல், 28. இரண்டு அரசர்களுடைய சுற்றத்தார் அனைவரும் இறத்தல் ஆகிய இருபத்தெட்டுத்துறைகளும் தும்பைத்திணைக்குரியன. பாலைக்குப் புறமானது வாகைத்திணை, 1. பகை அரசனைக் கொன்று பகையை ஒழித்துவிடும் வெற்றியே வாகை, 2. போர் முடித்துவாகைப்பூ சூடுதல், 3. மாலையினையும் கச்சினையும் கழலினையும் இனி அணிந்து கொள்வோம் என்று கூறுதல், 4. சிறந்த அரசனது தன்மையைக் கூறும் அரச வாகை, 5. முரசினுடைய தன்மையைக் கூறும் முரசுநிலை, 6. அரசனை உழவன் என்று சிறப்பித்துக்கூறும் மறக்கள வேள்வி. விளக்கம் : புறப்பொருள் வெண்பாமாலை தும்பைக்கு 24 துறைகளே சொல்லியுள்ளது. (சூத். 7) 140. | களத்தில்பேய்க் கூட்டல்பார்ப் பார்வாகை, வணிகர் காண்வாகை, வேளாளர் வாகையாரை யுஞ்சீர் வளத்தினால்இக ழேல்என்றி டும்பொருந வாகை, மரபுஅறிஞர் வாகைதா பதவாகை, கூதிர் துளித்தபாச றைவாடைப் பாசறைவேந்து இயல்பு சொல்அரச முல்லைபார்ப் பான் முல்லை, எட்டாய்த் தெளிக்கும்அவை முல்லைகணி வன்வாகை மறத்தைச் சிறியபேதை யர்க்குஉணர்த்து(ம்) மூதின்முல்லை இயல்பே. [12] | வாகைத்திணையின் துறைகளுள் ஒரு பகுதியை விளக்குகின்றது. உரை : 7. போர்க்களத்தில் பேய்கள் கூடுதல், 8. பார்ப்பாரது தன்மையைக் கூறும் பார்ப்பன வாகை, |