9. வாணிக வாகை, 10. வேளாளர் வாகை, 11. உன் புகழ் மிகுதியாக இருப்பதனால் பிறரை இகழாமல் இரு என்று கூறும் பொருந வாகை, 12. மூன்று கால நிகழ்ச்சியையும் அறிந்து சொல்லும் அறிஞரின் தன்மையைக் கூறும் அறிஞ வாகை, 13. தபோதன வேடத்தார் தன்மையைக் கூறும் தாபத வாகை, 14. கூதிர் காலத்துப் பிரிவாற்றாமையால் வருந்தும் கூதிர்ப் பாசறை, 15. வாடைக் காற்றின் மிகுதியைக் கூறும் வாடைப் பாசறை, 16. அரசனுடைய தன்மையைக் கூறும் அரச முல்லை, 17. பார்ப்பான் முல்லை, 18. எட்டு வகை நெறியைப் பின்பற்றி நடுவு சொல்லும் சான்றோர் தன்மையைக் கூறும் அவைய முல்லை, 19. சோதிடரால் வல்லவனது கீர்த்தியைக் கூறும் கணிவன் வாகை, 20. வீரத்தின் சிறப்பைச் சிறிய பேதையர்க்கு எடுத்துக் கூறும் மூதின் முல்லை. பாட விளக்கம் : ‘கணிவன வாகை’ (4 வது வரி) என்பது மூலபாடம். 141. | இயல்புஇடஞ்சொற் றிறையைஉயர்த் தியவல்லான் முல்லை இறைகாவன் முல்லைகா வல்தகுதி கூறல், உயிர்இறைவன் களங்கொள்பே ராண்முல்லை, கொடுத்தது உவந்திடாம றமுல்லை, குடைபுகழு முல்லை துயில்நிலைபோர் அவிகொடுத்தல், சால்புமுல்லை, கிணைவன் சூழ்ந்துளவற் புகழ்ந்திடுகள் வழியேதத் துவத்தின் பயனுணர்தல், உணர்ந்துஅருளால் நீங்கன்முப்பா னொன்றும் பரித்தவாகைத் திணைக்குஎன்று ரைப்பர்பெரி யோரே. [13] | வாகைக்குரிய துறைகளின் ஒரு பகுதியைக் கூறுகின்றது. உரை : 21. இடத்தினையும் இயல்பினையும் சொல்லி அரசனை உயர்த்திக் கூறும் வல்லாண் முல்லை, 22. அரசன் பாதுகாத்தலைச் சிறப்பிக்கும் காவன் முல்லை, 23. அரசன் பாதுகாத்தலின் தகுதியைக் கூறல், 24. அரசன் போர்க்களத்தைக் கொண்ட சிறப்பைக் கூறும் பேராண் முல்லை, 25. மன்னன் கொடுத்ததை விரும்பாத வீரனின் தன்மையைக் |