சுவாமிநாதம்241புறத்திணை மரபு
 

இடித்தல், 73. தோள் நோக்கம் ஆடுதல், 74. குயில் கூவித்தல், 75.
தெள்ளேணம் கொட்டுதல், 76. வாகனத்தின் திறம்

151. திரைக்காப்புச், செங்கீரை, தாலம்சப் பாணி,
     செய்யமுத்தம், வாரானை, அம்புலிகூ யாடல்,
அறைத்தசிறு பறை,சிற்றில் அழித்தாடல், சிறுதேர்,
     அம்மானை, கழங்குஊசல், சோபனங்கட் டியமே,
துறைக்கொம்மை, தத்தாங்கி, கப்பன், மதங்கு,ஏசல்,
     தொண்ணூற் றாறுஇவைகள் போல்பிறவும்ஒழி பாகும்;
இறைத்தமுன்னூற் றோடுநாற்பான் இரண்டுபுறத் துறையாம்;
     இருபொருளில் துறைஎண்ணூற்று இருபான்ஆ றெழுமே. [23]

77. காப்பு, 78. செங்கீரை, 79. தாலம், 80. சப்பாணி, 81. முத்தம், 82.
வாரானை, 83. நிலாவைக் கூப்பிடல், 84. சிறுபறை, 85. சிற்றில் அழித்து
விளையாடல், 86. சிறுதேர் உருட்டல், 87. அம்மானை, 88. கழங்கு ஆடுதல்,
89. ஊஞ்சலாடுதல், 90. சோபனம், 91. கட்டியம், 92. துறைக்கொம்மை, 93.
தத்தாங்கி, 94. கப்பல், 95. மதங்கு, 96. ஏசல் என்ற தொண்ணூற்று ஆறும்
இவை போன்ற பிறவும் ஒழிபியலைச் சார்ந்தன.

வெட்சி
வஞ்சி
உழிஞை
நொச்சி 
தும்பை
வாகை
காஞ்சி
பாடாண்திணை
ஒழிபு
 49
 25
 32
  9
 28
 31
 24
 48
 96
  342