சுவாமிநாதம்273அணியதிகாரம்
 

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 29, 69, 31 ஆகிய சூத்திரங்களைப்
பின்பற்றியது.

181. இதரவித ரம்,புகழ்தல்,நிந்தை,கூ டாமை,
     யின்சொல்,பல பொருள்ஐயந் தெரிதருதோற் றந்,தான்
உதவுசமுச் சய,மோக, நியமம்,அநி யமமே,
     ஓர்வயிற்,பல வயிற்,போலி; அற்புதம்,அ பூதம்
விதமுறுவி காரம்,உண்மை, பொதுநீக்கம், இயம்பல்
     வேட்கைவிப ரீதமாலை, இருபதிரண்டு; அவற்றில்
அதுநிகர்ஈ திதுநிகரது எனல்இதர விதரம்;
     அப்புகழ்தல் உவமைதனைப் புகழ்வபொரு ளினுமே.  [3]

இது முதல் நான்கு சூத்திரங்கள் உவமையின் விரியை உணர்த்துகின்றன.

     உரை : 1. இதர விதரம், 2. புகழ், 3. நிந்தை, 4. கூடாமை, 5.
இன்சொல், 6. பல்பொருள், 7. ஐயம், 8. தெரிதருதேற்றம், 9. சமுச்சயம், 10.
மோகம், 11. நியமம், 12. அநியமம், 13. ஒருவயிற்போலி, 14. பலவயிற்போலி,
15. அற்புதம், 16. அபூதம், 17. விகாரம், 18. உண்மை, 19. பொது நீக்கம், 20.
இயம்பல் வேட்கை, 21. விபரீதம், 22. மாலை என இருபத்திரண்டு வகையை
உடையது உவமை.

     இதரவிதர உவமை என்பது ஒரு பொருள் ஒரு சமயம் உவமையாயும்
மற்றொரு சமயம் பொருளாயும் வருமாறு உவமிப்பது. புகழ் உவமை என்பது
பொருளைப் புகழ்ந்து கூறுவது.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 32-ஆம் சூத்திரத்தை ஒட்டியது.
ஆனால் தண்டி 24 வகையே கூறியுள்ளது. மறுபொருள் என்ற அணிக்குப்
பதிலாக இதில் அற்புத அணி சேர்க்கப்பட்டுள்ளது. உவமை விரியின்
இலக்கணம் தண்டியலங்கார உரையில் மட்டுமே காணப்படுகின்றது.