சுவாமிநாதம்274அணியதிகாரம்
 
182. பொருள்உயர்த்தி உவமையைநிந் திப்பதுநிந் தையாம்;
     பொருட்குஇலாக்கு ணம்பொருத்திநிகர்சொலல்கூ டாமை;
ஒருபொருளின் உவமையைமேம் படுத்திமேம் படினும்
     உயர்ச்சிஇலாது ஒப்பலதுஎன்று உரைத்தல் இன்சொல்
                                           லாகும்;
அரியபொருள் ஒன்றுபல உவமைபல பொருளாம்;
     ஐயம்உவ மையும்பொரு ளும்ஐயுற லாம்;ஐயம்
கருதிமறுப் பதுதெரியும் தேற்றம்;இதா னன்றிக்
     காணும்இத னாலும்ஒப்பாம் என்றல்சமுச் சயமே.     [4]

     உரை : பொருளை உயர்த்திக்கூறி உவமையைத் தாழ்த்திக் கூறுவது
நிந்தை உவமையணி. ஒரு பொருளுக்கு இல்லாத பண்பைச் சேர்த்துக்கூறி
உவமையாக்குவது கூடாமை உவமையணி. ஒரு பொருளை விட உவமையை
உயர்த்திக் கூறி அவ்வாறு உயர்த்திக் கூறினாலும் உயர்வு இல்லாது
ஒப்புஇல்லை என்று கூறுவது இன்சொல் உவமையணி. அரிய பொருள்
ஒன்றுக்குப் பல உவமைகளைக் கூறுவது பல பொருள் உவமையணி.
உவமையையும் பொருளையும் ஐயப்பட்டுக் கூறுவது ஐய உவமை. ஐயப்பட்ட
பொருளை ஆராய்ந்து துணிவது தெரிதருதேற்ற உவமையணி. இந்தப்
பொருளால் மட்டுமின்றி வேறுசிலவற்றாலும் ஒக்கும் என்பது சமுச்சய உவமை.

183. மேவுமயல் வெளிப்படஓ துதன்மோக(ம்); நியம
     விதிஇதற்கு இதேநிகர்என் றிடநியம(ம்); மறுக்கிற்
பாவும்அநி யமமாம்;ஓர் தொடர்ச்சொலிற்பல் உவமை
     பலவயிற்போ லியதாம்;ஒன்று ஒருவயிற்போ லியதாம்;
கூவுபொருட் குணம்உவமைக்கு உண்டெனில்ஒப்பு, ஒன்றே
     கூறுவதுஅற் புத(ம்); முன்பி லாநிகர்அ பூதம்
தாவுவமை வினைவிகாரித் தல்விகா ரமதாம்
     சாற்றுஉவமைசொலிமறுத்துப் பொருள்சொலல்உண்
                                     மையதே   [5]

     உரை : ஒரு பொருள்மேல் எழுந்த வேட்கை வெளிப்படும்படி
கூறுதல் மோக உவமையணி. இன்ன பொருளுக்கு