இன்னதே உவமையாகக் கூறவேண்டும் என்ற நியதியே நியம உவமையணி. நியமித்த உவமையை விலக்கிப் பிற உவமைகள் மிகவும் பொருத்தமானது என்பது அநியம் உவமையணி. ஒரு தொடர் மொழியில் பல உவமை வந்து வந்த உவமை ஒவ்வொன்றிலும் உவமைச்சொல் வெளிப்படும்படிச் சொல்வது பலவயிற்போலி உவமையணி ஒரு தொடர்மொழிக்கண் பல உவமை வந்தால் அந்த உவமைகள் ஒவ்வொன்றிலும் உவமைச்சொல் இல்லாமல் ஒரு உவமைச் சொல்லை மட்டுமே பயன்படுத்துவது ஒருவயிற்போலி உவமையணி. ஒரு பொருளின் பண்பு உவமிக்கப்படும் பொருளுக்கு இருந்தால் ஒப்பாக ஆகமுடியும் என்று கூறுவது அற்புத உவமையணி. முன்பு இல்லாததனை உவமையாக்கி உரைப்பது அபூத உவமை. ஒரு உவமையை விகாரப்படுத்திக் கூறுவது விகார உவமையணி. உவமையைச் சொல்லி மறுத்துப் பொருளையே கூறி முடிப்பது உண்மை உவமையணி. 184. | சொல்உவமை சொலிமறுத்துப் பொருளைஒப்பாய்ப் பொருட்கே சொலல்பொதுநீங் குவமை;இதை இதுவாகச் சொலவே ஒல்லும்விருப் பெனல்இயம்பல் வேட்கை;பொரு ணிகார யுவமைபொரு ளாய்க்கூறல் விபரீதம்;ஓர் பொருளிற் பல்உவமைக்கு ஒன்றோடொடுஒன்று; இடைவிடாத் தொடர்ச்சி பகர்மாலை யாம்;உயர்ச்சி, தாழ்ச்சி,மிகல் குறைதல் நல்லபான்மா றல்வருமே னும்வழு வில வா நவில்போலப், புரையமுதற் பலவாம்ஒப் புருபே. [6] | உரை : உவமையைக் கூறி மறுத்துப் பொருள் தன்னையே உவமையாகக் கூறுவது பொதுநீங்கு உவமையணி. இந்தப் பொருளை இன்ன உவமையாகச் சொல்வதற்கே விருப்பம் என்று கூறுதல் வேட்கை உவமையணி. தொடர்ந்து உவமையாய் வருவதனைப் பொருளாகவும் பொருளாய் |