சுவாமிநாதம்276அணியதிகாரம்
 

வருவதனை உவமையாகவும் கூறுவது விபரீத உவமையணி. ஒரு
பொருளுக்குப் பல உவமை வந்தால் அவை ஒன்றோடு ஒன்று இடைவிடாது
தொடர்ச்சி உடையதாகச் சேர்த்தல் மாலை உவமையணி. உவமையைப்
பொருளை (உவமேயம்) விட உயர்த்திச் சொல்லுதலும் தாழ்த்திச்
சொல்லுதலும் மிகுத்துச் சொல்லுதலும் குறைத்துச் சொல்லுதலும் பால்
வேறுபடுத்திச் சொல்லுதலும் (ஆண்பாலுக்குப் பெண்பால் உவமையைக்
கூறுதலும் பெண்பாலுக்கு ஆண்பால் உவமை கூறுதலும் போல்வன)
உடையனவாக வந்தாலும் குற்றம் ஏற்படாத முறையில் கூறவேண்டும். போல,
புரைய போன்ற பலவும் உவம உருபுகளாக வரும்.

     விளக்கம் : தண்டியலங்காரம் 34ஆம் சூத்திரத்தையொட்டிச்
சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன உவம உருபுகள்.

     பாட விளக்கம் : ‘பொருணிகாரய்’ என்பது விளங்கவில்லை. ஆயினும்
பொருளே உவமையாக வருவதைக் குறிக்கின்றது என்று இடம் நோக்கிக்
கொள்ளப்பட்டுள்ளது.

185. ஒப்பின்இரு பொருளைமொழிக் குறிப்பின்வே றாக்கல்
     உற்றவேற்று மை;பொருளா தியற்புணரு முன்னோர்
மெய்ப்பொருள்வைத் ததுமுடிய உலகறிசொற் சொலலாம்
     விரிவேற்றுப் பொருள்,கூட்டம், கூடாமை, இருமை,
தப்பும்விப ரித(ம்),முரண்ஓர் வழிமுழுமை, ஏழாஞ்
     சரமசரத்து இயல்பைவே றோர்குறிப்பின் ஏற்றல்
செப்பியதற் குறிப்பாம்;ஒன் றினுக்குஒத்த பயனைத்
     தீமைநன்மை புலப்படக்கூ றல்நிதரி சனமே.     [7]

வேற்றுமை, வேற்றுப்பொருள் வைப்பு, தற்குறிப்பு, நிதரிசனம் ஆகிய
அணிகளை விளக்குகிறது.

     உரை : ஒத்த இரண்டு பொருட்களைச் சொல் வழியாகவும் (ஒன்றின்
சிறப்பை வெளிப்பட எடுத்துச் சொல்லுதல்) குறிப்பாகவும் தம்முள்
வேற்றுமைப்படச் சொல்லுதல்