சுவாமிநாதம்295
 

3. அமைதி மரபு

202. இடம்,உலகம் கலை,காலம், ஆகம(ம்)நியாயம்
     இவைமலைவும் எழுத்துச்சொற், பொருள்,யாப்பொடு,
                                            அணியிற்,
படர்வழுவும் அவற்றினில்ஆ னந்தம்நீக் கிடுக;
     பகர்ந்தனபின் பகரில்அனு வாதம்என்றே அமைக்கத்
தொடரியலின் விதியுணர்த்தி ஒருவாற்றான் விலக்குஞ்
     சொல்வர்இன்றி யமையாதுஎன் றமைக்க விந்நூல் முன்பின்
தடமறிந்(து), உதாரணம் மேற் கோள்ஏது அறிந்து,
     தழுவுகஐந் திலக்கணமுந் தமிழ்உணர்பூ தலத்தே    [1]

     1. இடமலைவு, 2. உலகமலைவு, 3. கலைமலைவு, 4. காலமலைவு, 5.
ஆகம மலைவு, 6. நியாயமலைவு ஆகிய ஆறுவகை மலைவும் 1. எழுத்து
வழு, 2. சொல்வழு, 3. பொருள் வழு, 4. யாப்பு வழு, 5. அணி வழு ஆகிய
ஐந்து வழுவும் ஆனந்தக் குற்றமும் நீக்கவேண்டும்.

     முன்னே சொன்னவற்றை மீண்டும் சொன்னால் ‘அனுவாதம்’ என்று
கருதி அமைத்துக்கொள்க.