102

கானல் கழியே கடலே காற்றே
பானல் பற்றை பனிமதிப் பருவம்
மலையே புனமே மழையே பிறவும்
என்றிவை யிற்றொடு நின்றுரை யாடலும்
ஒன்றிய குறிப்பென வுரைக்கல் வேண்டும்."

இனி மெய்ப்பாடாவது,

"மெய்ப்பாட் டியல்வகை மேதக விரிப்பின்
மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றஞ்
செவ்விதில் தெரிந்து செப்பல்மற் றதுவே;
சுப்பிர யோகம் விப்பிர யோகஞ்
சோக மோக மரண மென்னும்
ஐவகைக் கணையு ளாக்கிய காமம்
பைய முறுகிடப் படரும்; அவற்றுள்,
சுப்பிர யோகம் சொல்லு நினைப்பும்;
விப்பிர யோகம் வெய்துயிர்ப் புறுதல்;
சோகம் வெப்புஞ் சோறுண் ணாமையும்;
மோக மயக்கமு மொழிபல பிதற்றலும்;
மரண மணங்கலும் வருந்தலு மென்பர்
அரணஞ் சான்ற அறிவி னோரே.
பிற்கணை நீக்கி முற்கணை நான்கும்
மெய்ப்படப் பட்டு வருந்தி விளம்பல்
அகமெய்ப் பாட்டே புறமெய்ப் பாட்டெனத்
தகநனி யுணர்ந்தோர் தந்துரைத் தனரே.
அகமெய்ப் பாட்டே யறியுங் காலை
விளர்ப்பே பசப்பே மெலிவே விதிர்ப்பே
துளக்கந் துயர்தல் தும்மல் சோர்தல்
வேர்த்தல் வெருவுதல் விம்முதல் விரும்புதல்
ஒப்பி லாமை யுருகுதல் மயங்குதல்
மூரி யுயிர்ப்பு மூர்ச்சனை முறுவல்
காரிகை கடத்தல் கழிகண் ணோட்டம்
இருந்துழி யிராமை யிராக மிகழ்தல்
வருந்திக் காட்டுதல் வாய்நனி யுறுதல்
சிந்தனை கூர்தல் சேர்துயி லின்மை
கண்டது மறுத்தல் காட்சி விரும்பல்
உண்டி விரும்பாமை யுரைத்தது மறுத்தல்
கண்ணீர் வழிதல் கனவுநனி காண்டலென
எண்ணாற் றுறையு மென்மனார் புலவர்.