103

புறமெய்ப் பாட்டே திறனுளிப் புகலில்
ஆரணங் காயவக் காமந் தானே
காரணம் பற்றிக் கருத்துவேறு பட்டு
மற்றுமொ ரேழாய் மெய்க்கண் டதனொடும்
எட்டா மென்ப ரியல்புணர்ந் தோரே.

அவைதாம்,

நற்சிருங் காரம் நகையே வியப்பே
அச்சம் வீர முட்கோ ளிரக்கம்
இழிப்பெனத் தோன்றின இவை; அவை தாமே
விழுத்தக வொன்றிற் கொரோநான் காக
முப்பத் திரண்டென மொழிந்தனர் கண்டே.

அவற்றுள்,

இளமையும் வனப்பும் வளமையுங் கலவியும்
களனாகத் திரிதருஞ் சிருங்கா ரம்மே.
மயக்கம் பெயர்ப்பே யிகழ்வே நோக்க
நயப்பத் தோன்று நகையது நலனே.
தறுகண்மை புலமை பொருளே பண்பே
பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே.
மாற்றலர் விலங்கல் மற்றவர் சேருதல்
ஆற்றத் தோன்று மச்சத்து விளைவே.
பகையே செருவே யிகலே முனிவே
மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே.
ஐவகைக் குரவர் தேவர் மன்னர்
எய்தா தெய்திய வியல்பவை உட்கோள்.
வருத்த மிகழ்வே வலியின்மை பெருமை
இரக்கம் தோன்று மிந்நா லிடத்தே.
நாற்றஞ் சுவையே தோற்ற மூறென்(று)
இந்நால் வழித்தாம் இழிப்பெனப் படுமே.
இற்றென வகுத்த வெண்ணாற் றுறையினும்
மற்றுப் பெயர்மயக் காயினும் வாய்ப்ப(து)
அந்நெறிப் பெற்றுழித் துன்னினர் கொளலே.
உட்கோ ணிலைமை யுணர வுரைப்பின்
மெய்க்கொளத் தோன்றினவை மெய்ப்பா டென்க."

இனிக் காரணமாவது, இன்ன காரணம் பற்றி வந்தது இப்பாட்டென்று அறிவது.