106 | பொருவறு வனப்பிற் புனைந்துரை யாகியும் இருவகை யியல்பு மேற்ப வருமே. ஒப்பிக்கப் படுவ துவமமும் பொருளும் ஒப்புடைக் காதல் புகட்சித னுயர்பே அப்பொரு ளதுவாய்க் கிடம்பினு மதுவே. இரண்டு மூன்று முதலாக் குணங்கள் திரண்டவொப் புவமை திருந்த வுடைத்தே. முடிக்கப் படுவது மொழிவது மிருகுணம் அடுக்க வரினே தலைப்பா டொப்பாங் கிளர்ந்தன வுவமை கேட்போர்க்குத் தகுமென உளங்கொளும் பெற்றியி னுருபுநனி பெற்றுக் கண்ணுள் ளதுபோற் காட்டுவ னாயின் ஒண்மை யுடையோ ருணர்ந்தனர் கொளலே. அவ்வகைத் தன்றெனி லாதனும் பித்தனும் ஒவ்வா வானை யொப்பித் தோனே. நோக்கிய வொப்பினு மோரோ நோன்பொருள் ஆக்கி யுரைப்ப ததிசய வொப்பே. ஐயமுந் துணிவு மாக வொப்புமை செய்யவும் பெறுவர் தெரிந்திசி னோரே.
ஆங்க, ஒப்புமைச் சொற்களைச் செப்புங் காலை ஒப்ப வுறழ வுணர்ப்ப வுரப்ப வேய்ப்ப மெத்தமெய்த்த விளக்கப் புரையப் பொருந்தப் பொற்பக் கடுப்பக் குரையக் கதழக் கருதக் கூட நிகர மேவ நோக்க வோராங்(கு) இகல வேம வியைப்ப வொப்ப மான மருள மறல நீக்க நீர வனைய நோக்கத் தொடிய நுணங்கப் படிப துணிப்ப வுன்ன வணங்க வாவ மலைய வென்ன வெப்பத் தொழப்ப விட்ட விருள இன்ன வன்ன வென்றா வியைபுந் துன்னு மென்ப துணிந்திசி னோரே. உருவ மாயி னெஞ்சக் கிளத்தல் இல்பொரு ளிடையு மேற்பித் துரைப்பர் பொருளறு கேள்விப் புலமை யோரே.
|
|
|